291. ‘எய்ப்புழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு.
உரை
   
292. வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல்.
உரை
   
293. தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கலார்,
‘பின்னை, ஒருவரால் செய்வித்தும்’ என்று இருத்தல்,-
செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ?
உரை
   
294. ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,
இருவரிடை நட்பான் புக்கால், பெரிய
வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்
குறுக் கண்ணி ஆகிவிடும்.
உரை
   
295. சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை;
விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்,
புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன்.
உரை
   
296. நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்.
உரை
   
297. ‘ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்’
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார்,-நின்றது,
சென்றது, பேராதவர்.
உரை
   
298. மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்-
யானைப் பல் காண்பான் புகல்.
உரை
   
299. உளைய உரைத்துவிடினும், உறுதி
கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள்
பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!-
தாய் மிதித்த ஆகா முடம்.
உரை
   
300. குலத்துச் சிறியார், கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து
நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்
தலை கீழாக் காதிவிடல்.
உரை