தொடக்கம் |
|
|
301. | நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி நோக்கி, அறிப; அதுவேபோல், நோக்கி, முகன் அறிவார் முன்னம் அறிப; அதுவே, மகன் அறிவு தந்தை அறிவு. | |
|
உரை
|
|
|
|
|
302. | சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால், பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு, வராஅஅல் வாங்குபவர். | |
|
உரை
|
|
|
|
|
303. | இன்றி அமையா இரு முது மக்களும் பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ? ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின் குன்று, வழி அடுப்பது இல். | |
|
உரை
|
|
|
|
|
304. | கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார் இடம் கொண்டு, ‘தம்மினே’ என்றால், தொடங்கிப் பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல், நகை மேலும் கைப்பாய் விடும். | |
|
உரை
|
|
|
|
|
305. | உறாஅ வகையது செய்தாரை, வேந்தன், பொறாஅஅன் போல, பொறுத்தால், பொறாஅமை மேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ, கூன்மேல் எழுந்த குரு. | |
|
உரை
|
|
|
|
|
306. | ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார் நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம் பன்மையின் பாடு உடையது இல். | |
|
உரை
|
|
|
|
|
307. | தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி, நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு. | |
|
உரை
|
|
|
|
|
308. | ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றியாண்டும் பாணித்தே செய்ப, வியங்கொள்ளின்;-காணி பயவாமைச் செய்வார் ஆர்? தம் சாகாடேயும் உயவாமைச் சேறலோ இல். | |
|
உரை
|
|
|
|
|
309. | இடு குடைத் தேர் மன்னர், ‘எமக்கு அமையும்’ என்று, கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு, முடிதல் எனைத்தும் உணரா முயறல்,- கடிய கனைத்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
310. | தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப் பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல் கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக் கள்ளராச் செய்குறுவார். | |
|
உரை
|
|
|
|