321. தன்-தூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்று அது கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.
உரை
   
322. ‘எம் கண் அனையர்’ எனக் கருதின், ஏதமால்;
தங்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு.
உரை
   
323. செறிவுடைத் தார் வேந்தன் செவ்வி மாறாமல்,
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப;-வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது.
உரை
   
324. கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று.
உரை
   
325. முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன் இயற்கைப்~
பைத்து அகன்ற அல்குலாய்!-அஃதால், அவ் வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு.
உரை
   
326. அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்-
மிளகு உளு உண்பான் புகல்.
உரை
   
327. உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தான்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின்,
தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும்.
உரை
   
328. நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,
உலக்கைமேல் காக்கை என்பார்.
உரை
   
329. அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறுத்து வாயில் இடல்.
உரை
   
330. தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாக்கால்,
என்ன குறையன், இளையரால்?-மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால்.
உரை