331. கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல்.
உரை
   
332. சொல்தொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கற்றொறும், ‘கல்லாதேன்’ என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,
கற்றொறும் தான் கல்லாதவாறு.
உரை
   
333. பாற்பட்டு வாழ்வர் எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே;
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல்.
உரை
   
334. விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை?
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள்.
உரை
   
335. பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்’ எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா;-
தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,
நோவச் செயின், நோன்மை இல்.
உரை
   
336. அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்,
இமையாது காப்பினும் ஆகா; இமையாரும்
அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையின்,
நல் காப்பின் தீச் சிறையே நன்று.
உரை
   
337. நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில்.
உரை
   
338. இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
‘தருக!’ என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல்.
உரை
   
339. விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃதே, நன்
நெய்த்தலைப் பால் உக்குவிடல்.
உரை
   
340. ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறம் அரிதால்;-தேமொழீஇ!-ஆரும்
குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
புலப் புல வண்ணத்த, புள்.
உரை