341. தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?-
ஆமா உகளும் அணி வரை வெற்ப!- கேள்;
ஏமாரார் கோங்கு ஏறினார்.
உரை
   
342. சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடர்ப்பாடு கோடல்,-கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு.
உரை
   
343. முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர்
விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,
‘இழவு’ என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு.
உரை
   
344. ‘இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்’ என்று எண்ணி,
கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
இறைத்தோறும் ஊறும் கிணறு.
உரை
   
345. பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்,
உரைத்தால், உரை பெறுதல் உண்டு.
உரை
   
346. இம்மைத் தவமும், அறமும், என இரண்டும்,
தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்,
இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும்,
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு.
உரை
   
347. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப்படற்பாலான், முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல்,-முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு.
உரை
   
348. பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் அவிழினாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு.
உரை
   
349. தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையான் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு.
உரை
   
350. கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்
சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி
பாய் வரை நாட!-பரிசு அழிந்தாரொடு
தேவரும் மாற்றல் இலர்.
உரை