தொடக்கம் |
|
|
351. | கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது, கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப் பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?- ஊர் அறியா மூரியோ இல். | |
|
உரை
|
|
|
|
|
352. | ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா;- பெரு வரை நாட!-சிறிதேனும் இன்னாது, இருவர் உடன் ஆடல் நாய். | |
|
உரை
|
|
|
|
|
353. | துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு, வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,- அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி, மயில் போலும் கள்வர் உடைத்து. | |
|
உரை
|
|
|
|
|
354. | நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்குப் புக்கால், மெலிந்து அவன் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,- பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!- ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
355. | பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி; மருந்தின் தணியாது விட்டக்கால்,-தண் கடல் சேர்ப்ப!- பிணி ஈடு அழித்துவிடும். | |
|
உரை
|
|
|
|
|
356. | பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச் சிறியார் இனமா ஒழுகல்-வெறி இலை வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ, பூவொடு நார் இயைக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
357. | செயல் வேண்டா நல்லவை செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்- தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,- முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். | |
|
உரை
|
|
|
|
|
358. | தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால், என்ன படினும், அவர் செய்வ செய்வதே;- இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி போம் வழிப் போகும், இழை. | |
|
உரை
|
|
|
|
|
359. | மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து, ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனின், சென்று படுமாம், உயிர். | |
|
உரை
|
|
|
|
|
360. | பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து, ஆசு அறுவ செய்யாராய், ஆற்றப் பெருகினும், மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத கூதறைகள் ஆகார், குடி. | |
|
உரை
|
|
|
|