தொடக்கம் |
|
|
361. | முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும், தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின், நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!- அறி மடமும் சான்றோர்க்கு அணி. | |
|
உரை
|
|
|
|
|
362. | எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும், கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே, குழிப் புழி ஆற்றா குழிக்கு. | |
|
உரை
|
|
|
|
|
363. | கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம் பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது கும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசை அம்பாய் உள் புக்குவிடும். | |
|
உரை
|
|
|
|
|
364. | வழிப்பட்டவரை வலியராச் செய்தார் அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க பை அரவு அல்குல் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என், மெல்ல? கவுள் கொண்ட நீர். | |
|
உரை
|
|
|
|
|
365. | பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார், இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப் பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத் தன் நாரால் யாத்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
366. | பல் கிளையுள் பாத்துறான் ஆகி, ஒருவனை நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின், உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல், நிரையுள்ளே இன்னா, வரைவு. | |
|
உரை
|
|
|
|
|
367. | கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்; ‘நல்லேம் யாம்’ என்று ஒருவன் நன்கு மதித்தல் என்? சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,- சொல்லாக்கால் சொல்லுவது இல். | |
|
உரை
|
|
|
|
|
368. | தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?- இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!- உமிக் குற்றுக் கை வருந்துமாறு. | |
|
உரை
|
|
|
|
|
369. | மாற்றத்தை மாற்றம் உடைத்தலான், மாற்றவர்க்கு ஆற்றும் வகையான் அவர்க் களைய வேண்டுமே, வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான் நூற்றுவரைக் கொண்டுவிடும். | |
|
உரை
|
|
|
|
|
370. | இறப்பச் சிறியவர் இன்னா செயினும், பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலாவாறு. | |
|
உரை
|
|
|
|