தொடக்கம் |
|
|
371. | ஊழாயினாரைக் களைந்திட்டு, உதவாத கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும் தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து, காஞ்சிரை நட்டுவிடல். | |
|
உரை
|
|
|
|
|
372. | மடங்கப் பசிப்பினும், மாண்புடையாளர், தொடங்கிப் பிறர் உடைமை மேவார்;-குடம்பை மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!- கடலொடு காட்டு ஒட்டல் இல். | |
|
உரை
|
|
|
|
|
373. | தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா முற்றலை நாடிக் கருமம் செய வையார்; கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும், அற்றதன்பால் தேம்பல் நன்று. | |
|
உரை
|
|
|
|
|
374. | வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால்; என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே! இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே; பல் கட்டு, அப் பெண்டிர், மகார். | |
|
உரை
|
|
|
|
|
375. | நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின், கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;- பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின், பேர்த்து நாய் கவ்வினார் இல். | |
|
உரை
|
|
|
|
|
376. | எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை, கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,- நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு மறைந்து, யானை பாய்ச்சிவிடல். | |
|
உரை
|
|
|
|
|
377. | தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக் கொண்டு, கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
378. | உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய, செருக்கினால் செய்கலார் செய்வாரே போல, தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே- கருத்தினால் கூறை கொள்வார். | |
|
உரை
|
|
|
|
|
379. | படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத் தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,- அடரும் பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய, மீ வேலி போக்குபவர். | |
|
உரை
|
|
|
|
|
380. | பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே வளம் நெடிது கொண்டது அறாஅது;-அறுமோ, குளம் நெடிது கொண்டது நீர்? | |
|
உரை
|
|
|
|