381. ‘இரவலர் தம் வரிசை’ என்பார், மடவார்;
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர் வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-
நீர் வரையவாம் நீர் மலர்.
உரை
   
382. அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும்,
நிகர் ஒன்றின்மேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ,
கல்லொடு கை எறியுமாறு.
உரை
   
383. சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்,
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும்,
இளைது என்று பாம்பு இகழ்வார் இல்.
உரை
   
384. இகலின் வலியாரை எள்ளி, எளியார்,
இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய்,
என் செய்தே ஆயினும் உய்ந்தீக!-சாவாதான்
முன்கை வளையும் தொடும்.
உரை
   
385. ‘ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை’ என்ப;-ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!-
தெளியானைத் தேறல் அரிது.
உரை
   
386. ‘தீர்ந்தேம்’ எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்
பழமை கந்து ஆக, பரியார், புதுமை;-
முழ நட்பின், சாண் உட்கு நன்று.
உரை
   
387. மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல்,
அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால்
நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால்,
ஒடி எறியத் தீரா, பகை.
உரை
   
388. செய்த கொடுமை உடையான், அதன் பயம்
எய்த உரையான், இடரினால்;-எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்.
உரை
   
389. மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாதவாறே முயலும்;-கொடி அன்னாய்!-
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,
மூரி எருத்தான் உழவு.
உரை
   
390. எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது எதிர்த்து,
நனி நிற்பச் செய்தவர் நண்பு எலாம் தீர்க்க;-
தனி மரம் காடு ஆவது இல்.
உரை