391. வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு
படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம்.
உரை
   
392. செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது
நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்
நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதே
ஓடுக, ஊர் ஓடுமாறு!
உரை
   
393. ஓத நீர் வேலி உலகத்தார், ‘இந் நெறி
காதலர்’ என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்-
கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும்.
உரை
   
394. கெடுவல் எனப்பட்டக்கண்ணும், தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும்; தேயாது, சொல்.
உரை
   
395. மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,
பொய்ந் நீரர் ஆகிப் பொருளை முடிப்பார்க்கும்,
எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர்
தம் நீரர் ஆதல் தலை.
உரை
   
396. தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!-
மூரியைத் தீற்றிய புல்.
உரை
   
397. வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த
நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும்.
உரை
   
398. நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் அகல் அல்குலார்ப் படர்ந்து, ஒட்டித்
தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்?
உரை
   
399. பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
உரை
   
400. நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய
ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!-
வித்து இன்றிச் சம்பிரதம் இல்.
உரை