தொடக்கம் |
|
|
11. | நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும், ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,- நாவகம் மேய் நாடின் நகை. | |
|
உரை
|
|
|
|
|
12. | கோறலும் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு; வேறலும் நஞ்சு, மாறு அல்லானை; தேறினால், நீடு ஆங்குச் செய்தலும் நஞ்சால்; இளங்கிளையை நாடாதே, தீது உரையும் நஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
13. | இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா; தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;- கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்!-இன்னாதே, கொண்ட விரதம் குறைவு. | |
|
உரை
|
|
|
|
|
14. | கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத் தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே, வேல் வழி வெம் முனை வீழாது, மன் நாடு; கோல் வழி வாழ்தல் குணம். | |
|
உரை
|
|
|
|
|
15. | பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த, பகை, கெட வாழ்வதும் பல் பொருளால் பல்லார் நகை கெட வாழ்வதும், நன்று. | |
|
உரை
|
|
|
|
|
16. | கதம் நன்று, சான்றாண்மை தீது, கழியமதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால்,கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்தநாய் வாயுள் நல்ல தசை. | |
|
உரை
|
|
|
|
|
17. | நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப் பட்டு ஆர் அணி அல்குலார்ப் படிந்து ஒட்டி, துடங்கினார், இல்லகத்து, அன்பின் துறவாது;- உடம்பினான் ஆய பயன். | |
|
உரை
|
|
|
|
|
18. | பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார் வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை, ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல், பேர்த்து உடம்பு கோடல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
19. | தேவரே, கற்றவர்; கல்லாதார் தேருங்கால், பூதரே; முன் பொருள் செய்யாதார் ஆதரே; ‘துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!’ என்பர், இரு கால் எருது. | |
|
உரை
|
|
|
|
|
20. | கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை நள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய், ஊன் மறுத்துக் கொள்ளானேல், ஊன் உடம்பு எஞ் ஞான்றும் தான் மறுத்துக் கொள்ளான், தளர்ந்து. | |
|
உரை
|
|
|
|