தொடக்கம் |
|
|
31. | உயிர் நோய் செய்யாமை, உறு நோய் மறத்தல், செயிர் நோய் பிறர்கண் செய்யாமை, செயிர் நோய் விழைவு, வெகுளி, இவை விடுவான் ஆயின்,- இழவு அன்று, இனிது தவம். | |
|
உரை
|
|
|
|
|
32. | வேட்டவன் பார்ப்பான்; விளங்கிழைக்குக் கற்பு உடைமை; கேட்பவன் கேடு இல் பெரும் புலவன்;-பாட்டு, அவன் சிந்தையான் ஆகும், சிறத்தல்; உலகினுள் தந்தையான் ஆகும், குலம். | |
|
உரை
|
|
|
|
|
33. | வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்; உய்ப்பானே ஆசான், உயர் கதிக்கு; உய்ப்பான், உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ஊண் ஆரத் தொடங்கானேல், சேறல் துணிவு. | |
|
உரை
|
|
|
|
|
34. | வைததனான் ஆகும் வசை; வணக்கம், நன்று, ஆகச் செய்ததனான் ஆகும், செழுங் குலம்; முன் செய்த பொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்த அருளினான் ஆகும் அறம். | |
|
உரை
|
|
|
|
|
35. | இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும், நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல் தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்; ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு! | |
|
உரை
|
|
|
|
|
36. | மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும், உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே, வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
37. | தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்; வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக் கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்! புலந்தபின், போற்றார், புலை. | |
|
உரை
|
|
|
|
|
38. | பொய்யாமை நன்று; பொருள் நன்று; உயிர் நோவக் கொல்லாமை நன்று; கொழிக்குங்கால், பல்லார் முன் பேணாமை, பேணும் தகைய; சிறிய எனினும், மாணாமை, மாண்டார் மனை. | |
|
உரை
|
|
|
|
|
39. | பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார், உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா, யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின், காக்கையைக் காப்பு அடுத்த சோறு. | |
|
உரை
|
|
|
|
|
40. | உடை இட்டார், புல் மேய்ந்தார், ஓடு நீர்ப் புக்கார், படை இட்டார், பற்றேனும் இன்றி நடை விட்டார்,- இவ் வகை ஐவரையும் என்றும் அணூகாரே, செவ் வகைச் சேவகர் சென்று. | |
|
உரை
|
|
|
|