தொடக்கம் |
|
|
41. | பூவாதாள், பூப்புப் புறக்கொடுத்தாள், இலிங்கி, ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள், யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு,-இவ் ஐவரையும் சாரார், பகை போல் சலித்து. | |
|
உரை
|
|
|
|
|
42. | வருவாய்க்குத் தக்க, வழக்கு, அறிந்து, சுற்றம் வெருவாமை, வீழ் விருந்து ஓம்பி, திரு ஆக்கும் தெய்வத்தை எஞ் ஞான்றும் தெற்ற வழிபாடு செய்வதே-பெண்டிர் சிறப்பு. | |
|
உரை
|
|
|
|
|
43. | நாள் கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்று ஆய கோள் கூட்டம், யோகம், குணன், உணர்ந்து,-தோள் கூட்டல் உற்றானும் அல்லானும்,-ஐந்தும் உணர்வான் நாள் பெற்றானேல், கொள்க, பெரிது! | |
|
உரை
|
|
|
|
|
44. | பேண், அடக்கம், பேணாப் பெருந் தகைமை, பீடு உடைமை, நாண் ஒடுக்கம், என்று ஐந்தும் நண்ணின்றா, பூண் ஒடுக்கும் பொன் வரைக் கோங்கு ஏர் முலைப் பூந் திருவே ஆயினும், தன் வரைத் தாழ்த்தல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
45. | வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும் நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்ற தாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல் ஓவாது உரைக்கும் உலகு. | |
|
உரை
|
|
|
|
|
46. | அழியாமை எத் தவமும், சார்ந்தாரை ஆக்கல், பழியாமைப் பாத்தல் யார் மாட்டும் ஒழியாமை, கன்று சாவப் பால் கறவாமை, செய்யாமை மன்று சார்வு ஆக மனை. | |
|
உரை
|
|
|
|
|
47. | நசை கொல்லார், நச்சியார்க்கு என்றும்; கிளைஞர் மிசை கொல்லார்; வேளாண்மை கொல்லார்; இசை கொல்லார்; பொன் பெறும் பூஞ் சுணங்கின் மென் முலையாய்! நன்கு உணர்ந்தார் என் பெறினும் கொல்லார், இயைந்து. | |
|
உரை
|
|
|
|
|
48. | நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும் மாண்ட மலை, மக்கள் உள்ளிட்டு மாண்டவர் ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை வேந்தனா நாட்டல் விதி. | |
|
உரை
|
|
|
|
|
49. | பொச்சாப்புக் கேடு; பொருட் செருக்குத்தான் கேடு; முற்றாமை கேடு; முரண் கேடு; தெற்றத் தொழில் மகன்தன்னொடு மாறுஆயின், என்றும் உழுமகற்குக் கேடு என்று உரை. | |
|
உரை
|
|
|
|
|
50. | கொல்லாமை நன்று; கொலை தீது; எழுத்தினைக் கல்லாமை தீது; கதம் தீது; நல்லார் மொழியாமை முன்னே, முழுதும் கிளைஞர் பழியாமை பல்லார் பதி. | |
|
உரை
|
|
|
|