தொடக்கம் |
|
|
61. | அரம் போல் கிளை, அடங்காப் பெண், அவியாத் தொண்டு, மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக் கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல், உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. | |
|
உரை
|
|
|
|
|
62. | நீர் அறம் நன்று; நிழல் நன்று; தன் இல்லுள் பார் அறம் நன்று; பாத்து உண்பானேல், பேர் அறம் நன்று, தளி, சாலை, நாட்டல்;-பெரும் போகம் ஒன்றுமாம், சால உடன். | |
|
உரை
|
|
|
|
|
63. | பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடு எடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு அடுத்த சிறு பயம் என்னார், சிதவலிப்பு ஈவார் பெறு பயன், பின் சாலப் பெரிது. | |
|
உரை
|
|
|
|
|
64. | வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு, அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஐந்தினுள், ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும், குன்றுபோல் கூடும், பயன். | |
|
உரை
|
|
|
|
|
65. | குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து, உளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கம் இனிது. | |
|
உரை
|
|
|
|
|
66. | போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும், ஓர்த்து ஒரு பால் மறைத்து, உண்பான் மேய் ஓர்த்த அறம்; அறமேல் சொல் பொறுக்க; அன்றேல், கலிக்கண் துறவறம் பொய்; இல்லறம் மெய் ஆம். | |
|
உரை
|
|
|
|
|
67. | தான் பிறந்த இல் நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து, தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து, தான் பிறரால், ‘சாவ’ என வாழான், சான்றோரால், ‘பல் யாண்டும் வாழ்க!’ என வாழ்தல் நன்று. | |
|
உரை
|
|
|
|
|
68. | நெடுக்கல், குறுக்கல், துறை நீர் நீடு ஆடல், வடுத் தீர் பகல்வாய் உறையே, வடுத் தீரா ஆகும் அந் நான்கு ஒழித்து, ஐந்து அடக்குவான் ஆகில், வே கும்பம் வேண்டான் விடும். | |
|
உரை
|
|
|
|
|
69. | கொன்றான், கொலையை உடன் பட்டான், கோடாது கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால், கொன்றதனை அட்டான், இட உண்டான், ஐவரினும் ஆகும் என, கட்டு எறிந்த பாவம் கருது. | |
|
உரை
|
|
|
|
|
70. | சிறைக் கிடந்தார், செத்தார்க்கு நோற்பார், பல நாள் உறைக் கிடந்தார், ஒன்றுஇடையிட்டு உண்பார், பிறைக் கிடந்து முற்றனைத்தும் உண்ணாத் தவர்க்கு, ஈந்தார்,-மன்னராய், கற்று அனைத்தும் வாழ்வார், கலந்து. | |
|
உரை
|
|
|
|