தொடக்கம் |
|
|
71. | ஈன்று எடுத்தல்; சூல் புறஞ்செய்தல்; குழவியை ஏன்று எடுத்தல்; சூல் ஏற்ற கன்னியை, ஆன்ற அழிந்தாளை, இல் வைத்தல்;-பேர் அறமா ஆற்ற மொழிந்தார், முது நூலார், முன்பு. | |
|
உரை
|
|
|
|
|
72. | வலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால் நலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார்,-மெலிவு ஒழிய, இன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யும் மதித்து. | |
|
உரை
|
|
|
|
|
73. | கலங்காமைக் காத்தல், கருப்பம் சிதைந்தால் இலங்காமைப் பேர்த்தரல், ஈற்றம் விலங்காமைக் கோடல், குழவி மருந்து, வெருட்டாமை,- நாடின், அறம் பெருமை நாட்டு. | |
|
உரை
|
|
|
|
|
74. | சூலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின் ஏலாமை, ஏற்ப வளர்ப்பு அருமை, சால்பவை வல்லாமை,-வாய்ப்ப அறிபவர் உண்ணாமை, கொல்லாமை, நன்றால், கொழித்து. | |
|
உரை
|
|
|
|
|
75. | சிக்கர், சிதடர், சிதலைபோல் வாய் உடையார், துக்கர், துருநாமர், தூக்குங்கால், தொக்கு வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே-இந் நாள் ஒரு நோயும் இன்றி, வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
76. | பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல், தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார், இழிசினர்க் கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல், கழி சினம் காத்தல், கடன். | |
|
உரை
|
|
|
|
|
77. | புண் பட்டார், போற்றுவார் இல்லாதார், போகு உயிரார், கண் கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், கண் கண்பட்டு ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈத்தார்,-கடை போக வாழ்ந்து கழிவார், மகிழ்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
78. | பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்; அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதே உண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்;- எண்பதின் மேலும் வாழ்வான். | |
|
உரை
|
|
|
|
|
79. | வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்; புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல் கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்; கொடும் புலி கொட்கும் வழி. | |
|
உரை
|
|
|
|
|
80. | தக்கார் வழி கெடாதாகும்; தகாதவர் உக்க வழியராய் ஒல்குவார்; தக்க இனத்தினான் ஆகும், பழி, புகழ்; தம் தம் மனத்தினான் ஆகும், மதி. | |
|
உரை
|
|
|
|