தொடக்கம் |
|
|
91. | ‘பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான், மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது’-மெய் அன்றால்;- மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்!-தீது அன்றே எத் தவமானும் படல். | |
|
உரை
|
|
|
|
|
92. | புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல், நல்லறத்தாரோடும் நட்கலாம்; நல்லறத்தார்க்கு அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில் அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
93. | ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர் மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது, கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கே ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
94. | உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டு எண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி, உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக் கரைப் பூசை போறல், கடை. | |
|
உரை
|
|
|
|
|
95. | பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி, பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான்,-இவர் செம்மை செத்தால் அறிக, சிறந்து! | |
|
உரை
|
|
|
|
|
96. | வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல் குழிப் படல், தீச் சொற்கேளாடு, மொழிப்பட்ட காய்ந்து விடுதல்,-களைந்து, உய்யக் கற்றவர், ஆய்ந்து விடுதல் அறம். | |
|
உரை
|
|
|
|