தொடக்கம் |
|
|
ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்) 1. முல்லை தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது | |
1. | மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து, செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி,-நல்லாய்!- இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ மயங்கி வலன் ஏரும், கார்! | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
2. | அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி, மணி நிற மா மலைமேல் தாழ்ந்து,-பணிமொழி!- கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும், பீர் நீர்மை கொண்டன, தோள். | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது | |
3. | மின்னும், முழக்கும், இடியும் மற்று இன்ன கொலைப் படை சாலப் பரப்பிய,-முல்லை முகை வென்ற பல்லினாய்!-இல்லையோ, மற்று நமர் சென்ற நாட்டுள் இக் கார்? | |
|
உரை
|
|
|
|
|
4. | உள்ளார்கொல் காதலர்-ஒண்தொடி!-நம் திறம்? வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி, நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக் கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார். | |
|
உரை
|
|
|
|
|
5. | கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக் கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி, வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும், துளி கலந்து வீழ்தரும், கண். | |
|
உரை
|
|
|
|
|
6. | முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி செல்சார்வு உடையார்க்கு இனியவாய்,-நல்லாய்!-மற்று யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை ஈரும், இருள் மாலை வந்து. | |
|
உரை
|
|
|
|
|
7. | தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால், சிறு குழல் ஓசை,-செறிதொடி!-வேல் கொண்டு எறிவது போலும் எனக்கு. | |
|
உரை
|
|
|
|
|
8. | பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி, பொருந்தினர் மேனிபோல், பொற்ப,-திருந்திழாய்!- வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத கானம் கடந்து சென்றார்? | |
|
உரை
|
|
|
|
|
'பருவம்' என்று அழிந்த கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது | |
9. | வருவர்-வயங்கிழாய்!-வாள் ஒண் கண் நீர் கொண்டு, உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல், பைங் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன, வம்ப மழை உரறக் கேட்டு. | |
|
உரை
|
|
|
|
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது | |
10. | நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக! தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற கற்புத் தாள் வீழ்த்து, கவுள் மிசைக் கை ஊன்றி, நிற்பாள் நிலை உணர்கம் யாம். | |
|
உரை
|
|
|
|