2. குறிஞ்சி
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇயது
11. பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!-
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி, இனிது.
உரை
   
பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி
செறிப்பு அறிவுறீஇயது
12. மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம்.
உரை
   
சிறைப்புறத்தானாகத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத்
தலைமகள் இயற்பட மொழிந்தது
13. ‘கானக நாடன் கலவான் என் தோள்!’ என்று,-
மான் அமர் கண்ணாய்!-மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா!
உரை
   
தோழி தலைமகட்கு மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது
14. புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு.
உரை
   
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி, தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப்
படைத்து மொழி கிளவியான்வரைவு கடாயது
15. வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.
உரை
   
இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று
நின்ற தோழி வரைவு கடாயது
16. கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு,-
மடி செவி வேழம்-இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண்.
உரை
   
17. ‘மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட!
எஞ்சாது நீ வருதி’ என்று எண்ணி, அஞ்சி,
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும், உள் உருகி நின்று.
உரை
   
தோழி செறிப்பு அறிவுறீஇ, தலைமகனை வரைவு கடாயது
18. எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல்,
மறந்தும், கிளி இனமும் வாரா;-கறங்கு அருவி
மா மலை நாட!-மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு.
உரை
   
தோழி இரவுக்குறியின்கண் நெறி விலக்கி, வரைவு கடாயது
19. நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா,
கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள்,
இன்னா அதர் வர, ‘ஈர்ங் கோதை மாதராள்
என்னாவாள்!’ என்னும், என் நெஞ்சு.
உரை
   
தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்று வெறி விலக்கவேண்டும்
உள்ளத்தாளாய்ச் சொல்லியது
20. வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! ‘அணங்கு அணங்கிற்று!’ என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன்-தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய்.
உரை