தொடக்கம் |
|
|
3. மருதம் பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
21. | கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும் வேறு அல்லை,-பாண!-வியல் ஊரன் வாய்மொழியைத் தேற, எமக்கு உரைப்பாய், நீ. | |
|
உரை
|
|
|
|
|
22. | போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத் தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீ தான் அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்? நெறி அதுகாண், எங்கையர் இற்கு. | |
|
உரை
|
|
|
|
|
23. | யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல்,- பாண!-பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண அறிவது அறியும் அறிவினார் கேண்மை நெறியே உரையாதோ மற்று? | |
|
உரை
|
|
|
|
|
24. | கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம், சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம் காரத்தின் வெய்ய, என் தோள்! | |
|
உரை
|
|
|
|
|
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
25. | அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன் விழைதகு மார்பம் உறும், நோய்-விழையின், குழலும் குடுமி என் பாலகன் கூறும் மழலை வாய்க் கட்டுரையால். | |
|
உரை
|
|
|
|
|
புதல்வனை முனிந்து, தலைமகள் மறுத்தாளைப் போல, தோழிக்கு வாயில் நேர்ந்தது | |
26. | பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே- செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப, கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன் எய்தி, இடர் உற்றவாறு! | |
|
உரை
|
|
|
|
|
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது | |
27. | தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?- நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல், வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய வண்ணம் உடையேம், மற்று யாம். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்தது | |
28. | ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு வல்லென்றது என் நெஞ்சம்-வாள்கண்ணாய்!-'நில்' என்னாது, ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும் நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு. | |
|
உரை
|
|
|
|
|
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது | |
29. | ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம் புல்லேன் யான்’ என்பேன்;-புனையிழையாய்!-புல்லேன் எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன்- தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? | |
|
உரை
|
|
|
|
|
30. | குளிரும் பருவத்தேஆயினும், தென்றல் வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்;-ஒளியிழாய்!- ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி கூடல் இனிது ஆம், எனக்கு. | |
|
உரை
|
|
|
|