| தொடக்கம் | 
		
		
				|  | 
					
			
			|  | | 4. பாலை பருவம் கண்டு அழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது
 |  |
 | 31. | உதிரம் துவரிய வேங்கை உகிர்போல், எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
 இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
 துன்பம் கலந்து அழியும், நெஞ்சு.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | தலைமகனது பிரிவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது |  |
 | 32. | விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர் அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
 கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
 உச்சி ஒழுக்கும் சுரம்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | மகள் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது |  |
 | 33. | பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும், ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
 ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
 காய்ந்து கதிர் தெறூஉம் காடு?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது |  |
 | 34. | கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர் ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி,
 வேட்ட முனைவயின் சேறிரோ-ஐய!-நீர்
 வாள் தடங் கண் மாதரை நீத்து?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது
 |  |
 | 35. | கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
 விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
 பொருள் புரிந்தார் போய சுரம்.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது |  |
 | 36. | கடிது ஓடும் வெண்தேரை, ‘நீர் ஆம்’ என்று எண்ணி, பிடியோடு ஒருங்கு ஓடி, தாள் பிணங்கி, வீழும்
 வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல்,-நல்லாய்!-
 தொடி ஓடி வீழத் துறந்து?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | உடன் போய தலைமகட்கு, நற்றாய் கவன்று உரைத்தது |  |
 | 37. | தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால், வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
 கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல்
 வல்லவோ, மாதர் நடை?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | பிரிவின்கண் ஆற்றாளாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது |  |
 | 38. | சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி, பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
 கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
 உள்ளம் படர்ந்த நெறி.
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | தலைமகன் பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது |  |
 | 39. | மடவைகாண்;-நல் நெஞ்சே!-மாண் பொருள்மாட்டு ஓட, புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து
 விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ,
 நம்மின் பிரிந்த இடத்து?
 |  |
 | உரை | 
		
			|  |  |  | 
					
			
			|  | | 40. | இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா நன்கு வதிந்தனை;-நல் நெஞ்சே!-நாளை நாம்
 குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய்,
 என்கொலோ சேக்கும் இடம்?
 |  |
 | உரை | 
		
			|  |  |  |