தொடக்கம் |
|
|
5. நெய்தல் அல்லகுறிப்பட்ட தலைமகற்குச் சொல்லுவாளாய், தோழி, தலைமகட்குச் சொல்லியது | |
41. | தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து, ஒண் தடங் கண் துஞ்சற்க!-ஒள்ளிழாய்!-நண்பு அடைந்த சேவலும் தன் அருகில் சேக்குமால்; என் கொலோ, பூந் தலை அன்றில் புலம்பு? | |
|
உரை
|
|
|
|
|
காமம் மிக்க கழிபடர் கிளவி | |
42. | கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்; ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர் கடந்த வழியை எம் கண் ஆரக் காண, நடந்து சிதையாதி, நீ! | |
|
உரை
|
|
|
|
|
43. | பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை வரிப் புற வார் மணல்மேல் ஏறி, தெரிப்புறத் தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல், ஆழியால் காணாமோ, யாம்! | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது | |
44. | கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி, உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம் கண்டு, அன்னை, ‘எவ்வம் யாது?’ என்ன, ‘கடல் வந்து என் வண்டல் சிதைத்தது’ என்றேன். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனைத் தோழி வரைவு கடாதற்பொருட்டுத் தலைமகள் வரைவு வேட்டுச் சொல்லியது | |
45. | ஈர்ந் தண் பொழிலுள், இருங் கழித் தண் சேர்ப்பன் சேர்ந்து, என் செறி வளைத் தோள் பற்றித் தெளித்தமை,- மாந் தளிர் மேனியாய்!-மன்ற விடுவனவோ, பூந் தண் பொழிலுள் குருகு? | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறி வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்று தோழி வரைவு கடாயது | |
46. | ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம் பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும் கானல் அம் சேர்ப்ப! தகுவதோ, என் தோழி தோள் நலம் தோற்பித்தல் நீ? | |
|
உரை
|
|
|
|
|
தோழிக்குத் தலைமகன் சொல்லியது; தோழற்குச் சொல்லியதூஉம் ஆம் | |
47. | பெருங் கடல் உள் கலங்க, நுண் வலை வீசி, ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன் உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர் அணங்கு ஆகும், ஆற்ற எமக்கு. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகனைத் தோழி வரைவு கடாயது | |
48. | எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப! மிக்க மிகு புகழ் தாங்குபவோ, தற் சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்? | |
|
உரை
|
|
|
|
|
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்தமை அறிய, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது | |
49. | கொடு முள் மடல் தாழைக் கூம்பு அவிழ்ந்த ஒண் பூ இடையுள் இழுது ஒப்பத் தோன்றி, புடை எலாம் தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் செய்தான், தெளியாக் குறி. | |
|
உரை
|
|
|
|
|
50. | அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும் புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன்,-ஒளியிழாய்!- உள் உருகு நெஞ்சினேன் ஆய். | |
|
உரை
|
|
|
|