100

(விரி.) ஆல் - அசைநிலை. தோன்றி - தோன்ற; எச்சத்திரிபு. கிழத்தி - தலைவி. கார், கண்டு, மாந்தி, இருண்டு, கால் வீழ்த்து, தோன்ற (வும்) காதலர் தேர் தோன்றாது, என முடிக்க. தோன்ற - உம்மை தொக்கு நின்றது. பீர் - அச்சம். பருவம் - கார்ப்பருவம்.

(100)

வண்டினம் வௌவாத வாம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டின
மாராத பூந்தா ரணிதேரான் றான்போத
வாராத நாளே வரும்.

[இதுவுமது]

(பத.) வண்டு இனம் - வண்டுக் கூட்டங்கள், வௌவாத - விரும்பி மேற்கொள்ளாத, ஆம்பலும் - ஆம்பல் என்னும் பெயரையுடைய புல்லாங்குழலும், வார் - ஒழுங்காயமைந்த, இதழ் ஆன் - இதழ்களில், வண்டு இனம் - வண்டுக் கூட்டம், வாய் வீழா - வாய் வைக்க விரும்பாத, மாலை - சாயுங்காலமாகிய மாலையும், வண்டு இனம் - வண்டுக் கூட்டம், ஆராத - பொருந்த விரும்பாத, பூதார் - நெட்டிப் பூக்கள் முதலியவற்றாற் செய்த மாலைகளால், அணி - அலங்கரிக்கப்பட்ட, தேரான் - தேரினையுடைய தலைவன், போத - என்னிடஞ் சேரும்படி, வாராத - வருதலைச் செய்யாத, நாளே - நாள்களிலேயே, வரும் - (அவ்விரண்டும்) வந்து என்னைத் துன்புறுத்தும். (என்று தோழியிடம் தலைவி கூறினாள்.)

(ப-ரை.) வண்டினங்கள் விரும்பாத ஆம்பலென்னும் பெயரையுடைய குழலும், ஒழுகிய மலர்களிற் புக்கு வண்டினங்கள் வாய்வீழாத அந்தியாகிய மாலையும், வண்டினங்கள் புக்கொலியாத பூச்செயல்களையு முடைய புரவி பூண்ட தார் மணிகளையுடைய புரவிகளாலே ஒப்பிக்கப்பட்ட தேரினையுமுடையான் வாராத நாளே வந்து என்னை நலியும்.

(விரி.) ஆம்பல் - ஆம்பற்பூவின் வடிவாக அணைசு (அணிகலமாவும், உறுதியாகவும் அணைத்து வைக்கப்படும் யாதாமொரு உலோகத்தாலாகிய பூண்) பண்ணிச் செய்யப்பட்ட புல்லாங்குழல். இங்கு இஃது ஓசையினைக்