குறித்து நின்றது. ஆம்பலோசையும்,' மாலையும் தேரான் வாராத நாளிலே வரும், என முடிக்க. தான் அசைநிலை. ஏ - பிரிநிலை. (101) மானெங்குந் தம்பிணையோ டாட மறியுகள வானெங்கும் வாய்த்து வளங்கொடுப்பக் - கானெங்குந் தேனிறுத்த வண்டோடு தீதா வெனத்தேரா தியானிறுத்தே னாவி யிதற்கு. [இதுவுமது] (பத.) (தோழியே!) எங்கும் - முல்லை நிலங்களாகிய எல்லாப் பாகங்களிலும், மான் - ஆண் மான்கள், தம்பிணையோடு - தம்முடைய பெண்மான்களுடனே கூடி, ஆட - விளையாடுதலைச் செய்ய, மறி - அவற்றின் குட்டிகளும், உகள - அவற்றோடு சேர்ந்து குதித்துத் திரிய, வான் எங்கும் - விண் வெளியெல்லாம், வாய்த்து - முகில்கள் நிரம்பி மழையினைப் பெய்து, வளம் கொடுப்ப - வளத்தின் யுண்டாக்க, கான் எங்கும் - காடுகளிலெல்லாம், தேன் - தேன் வண்டுகள், இறுத்த - தம்மோடு கூடித் தங்கிய, வண்டோடு - வண்டுகளுடனே, தீ தா என - தீதா என்ற ஒலிக்குறிப்புடன் ஒலித்தலான், யான் - நான், தேராது - (தலைவர் கார்காலத்துத் திரும்புவேன் என்று பிரிவதும், கார்காலம் வருவதும், தலைவர் உறுதி மொழி பழுதாவதும் இயல் பென்பதைத்) தெளியாதவளாய், இதற்கு - இக்கார்காலம் தேன்றியும் தலைவர் வாராமைக்காக மயங்கி, ஆவி - எனது உயிரை, இறுத்தேன் - கடமையாகக் கொடுத்துக் கவல்கின்றேன். (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) மான்கள் தம்பிணைகளைக் கூடி எங்கும் விளையாட, அவற்றின் மறிகளு முகள, மழை யெங்கும் பெய்து வாய்த்து வளங் கொடுப்ப, காடெங்கும் தேன்களும் தம்மொடு சார்ந்த வண்டுகளோடு தீதாவென் றொலித்தலான், ஆராயாதே மயங்கிப் பருவத்துக் கென்னா வியைக் கடனாகக் கொடுத்தேன். (விரி.) தீதா - ஒலிக்குறிப்பு. இறுக்கப்படுவது இறையாகலான் கடமை எனப்பட்டது. (102)
|