ணீர்நின்ற நோக்கி! நெடும்பணைமென் றோளாட்குத் தேர்நின்ற தென்னாய் திரிந்து. [வினைமுற்றி மீண்ட தலைமகன் தலைமகட்குத் தூதுவிடுகின்றானாய்த் தூதிற்குச் சொல்லியது.] (பத.) படும் - ஒலிக்கின்ற, தடம் கண் - பெரிய கடிப்புறும் பாகத்தையுடைய, பல் பணை போல் - பலவாகிய முரசுகளைப் போன்று, வான் - முகில்கள், முழங்க - இடித்து ஆரவரிக்க, மேலும் - இன்னும், மின் - மின்னலானது, கொடும் தடம் கண் - கொடிய பெரிய கண்களையுடைய, கூற்று ஆக - எமனைப் போன்று தலைவியை வருத்த (அதனைப் பொறாது,) நெடும் - நீண்ட, தடம் - பெரிய, கண் - கண்களில், நீர் நின்ற - நீர்த்துளி தத்தளித்துக்கொண்டு நிற்கும்படியான, நோக்கி - பார்வையினையுடைய தோழியே! நெடும் - நீண்ட, பணை - மூங்கிலை யொத்த, மெல் தோளாள் கு - மிருதுவான தோள்களையுடைய தலைவிக்கு, தேர் - எனது தேரானது, திரிந்து - திரும்பி வந்து, நின்றது - (நின் மனை வாயிலின் கண்ணே) நின்றுகொண் டிருக்கின்றது, என்னாய் - என்று சொல்வாயாக. (என்று தலைவன் தோழியை நோக்கிக் கூறினான்.) (ப-ரை.) ஒலியா நின்ற தடங்கண்ணையுடைய பலமுரசு போல் முகில்கள் முழங்குவதன் மேலும், மின்னே கொடிய தடங் கண்ணினையுடைய கூற்றமாக, அழுகின்ற நீர் விடாது நின்ற நெடுந்தடங்கண்ணோக்கினையுடைய நெடும்பணை மென்றோளாட்கு நீ, மறித்துவந்து நின் மனை வாயிலின் கண்ணே அவன்றேர் நின்றதென்று சொல்லுவாய்; எமக்கு முன்னே சென்று தூதாக. (விரி.) கார்காலவரவானே மயங்கிய தலைவியைக் கண்டு கலங்கிய தோழி வீட்டு வாயிலின் முன்னே நின்று தலைவன் வரவினை நோக்கினாளாக, அவ்வளவில் தலைவன் தேரொடுந் திரும்பிவந்து அவளை நோக்கிக் கூறியதாகு மிச்செய்யுள். வினை - பொருள்தேடுதன் முதலியன. இங்குத் தூது தோழியாவாள். நோக்கி அண்மைவிளி. (115) குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்தே யெயிறொடுதார் பூப்பித் - திருந்தேயரும்பீர்
|