126

(விரி.) உளர்தல் - அசைதல்: புடை பெயர்தல்: புறப்படல். புது + இல் = புத்தில்: புது வீடு.

(126)

மென்கட் கலிவய லூரன்றன் மெய்ம்மையை
யெங்கட் குரையா தெழுந்துபோ - யிங்கட்
குலங்கார மென்றணுகான் கூடுங்கூர்த் தென்றே
யலங்கார நல்லார்க் கறை.

[இதுவுமது]

(பத.) மென்கண் - மெல்லிய இடத்தையுடைய, கலி - ஒலி நிறைந்த, வயல் ஊரன் தன் - மருத நிலததூர்த் தலைவனுடைய, மெய்ம்மையை - உண்மை யுரைகளை, எங்கட்கு - எமக்கு, உரையாது - சொல்லிக் காலத்தை வறிதே கழியாது, எழுந்துபோய் - இவ்விடத்தினின்றும் புறப்பட்டுப் போய், இங்கண் - இவ்வுலகத்தின்கண், குலம் - நற்குலத்தின்கண் வந்த மனையாளைக் (கூடிக் களித்தல்,) காரம் என்று - புண்ணிற்கிடுங் காரம்போன்று வெய்யதென்று (தலைவன் கருதி,) அணுகான் - அவளை நெருங்கானாய்ப் (பரத்தையர்களைப் புணர்தல் இன்பந் தருமென்று கருதி,) கூர்த்து - விருப்பமிகப் பெற்று, கூடும் - (அவர்களோடு) சேர்ந்து வாழும், என்றே - என்று, அலங்காரம் நல்லார்க்கு - தம்மை யலங்கரித்தலே பணியாகவுள்ள நல்லவர்களாகிய பரத்தையர்க்கு, அறை - சொல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

(ப-ரை.) மெல்லிய இடத்தையுடைய மிக்க வயலூரனுடைய மெய்யுரைகளை எங்கட்குச் சொல்லாதே இங்கு நின்று மெழுந்து போய் இவ்வுலகத்தின்கட் குலமுடைய மனையாளைப் புணர்தல் புண்ணிற்கு இடுங் காரம் போன்று வெய்யதென்று தலைவன் கருதி யவர்களை நெருங்கானாய், பரத்தையரைப் புணர்தல் பால்போன் றினிக்கும் பண்புடையதெனக் கருதி அவர்களை விரும்பிக் கூடுமென்று, தம்மை யழகுபடுத்திக் கொள்வதா நன்மை யொன்றினையே கொண்ட பரத்தையரக்குப் பகர்வாயாக.

(விரி.) பழையவுரையின் பிற்பாகத்திற் காணப்படும் பெரிய எழுத்துக்களானாய தொடர்கள் புதியனவாகச் சேர்க்கப்பட்டன. பழையவுரையில், 'மிக்க,' என்ற மொழிக்குமுன், 'ஒலி,' என்ற சொல் சேர்க்கப்பட்டாற்