பொருள் சிறந்து பொருந்துமாறு காண்க. பரத்தையர் இல்லறத்திற்குரிய நல்லாரல்லா ரென்பார், "அலங்கார நல்லார்," என்றார். ஏ - அசைநிலை. (127) செந்தா மரைப்பூ வுறநிமிர்ந்த செந்நெல்லின் பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந் தாடுவா - ளந்தார் வயந்தகம்போற் றோன்றும் வயலூரன் கேண்மை நயந்தகன் றாற்றாமை நன்று. [தலைமகன் பரத்தையிற் பிரியத் தலைமகள் புலந்து சொல்லியது] (பத.) செந்தாமரை பூ - செவ்விய தாமரை மலரோடு, உற - ஒன்றாக, நிமிர்ந்த - வளர்ந்து நிற்கின்ற, செந்நெல் இன் - செந்நெற் பயிரினது, பை தார்-பசிய கதிர்க்குலைகளையுடைய, புனல்வாய் -யாற்று நீரினிடத்திலே, பாய்ந்து - குதித்து, ஆடுவாள் - விளையாடுகின்ற பரத்தையினது, அம் தார் - அழகிய மார்மீதணிந்துள்ள மலர் மாலையின், வயந்து - வயப்பட்டு, அகம்போல் - அவளது மனம்போல, தோன்றும் - வெளிப்பட்டு நடக்கும், வயல் ஊரன் - மருத நிலத்துார்த்தலைவனது, கேண்மை - நட்பினின்றும், நயந்து - பகையின்றியே, அகன்று - விலகி, ஆற்றாமை - துன்புற்று வாழ்தல், நன்று - நல்லதாகும், (என்று தலைவி தனக்குட்டானே கூறினாள்.) (விரி.) இச் செய்யுள் முதல் பின்வரும் இருபத்தேழு செய்யுட்கட்கும் பழைய பொழிப்புரை கிடைக்கவில்லை. தார் = தாறு - குலை. புலத்தல் - ஊடல். (128) வாடாத தாமரைமேற் செந்நெற் கதிர்வணக்க மாடா வரங்கினு ளாடுவா - ளீடாய புல்லக மேய்க்கும் புகழ்வய லுாரன்ற னல்லகஞ் சேராமை நன்று. [இதுவுமது]
(பத.) வாடாத - அப்பொழுது அலர்ந்த, தாமரைமேல் - தாமரைப் பூவினிடத்தே, செந்நெல் கதிர் - செவ்விய நெற்
|