கதிர்கள், வணக்கம் - வணங்கித் தங்கும்படியாக, ஆடா அரங்கின் உள் - கூத்தியர் ஆடுதலில்லாத புனலிடமாகிய யாற்று நீரிலே, ஆடுவாள் - நீர்குடைபவளாகிய பரத்தையினது, ஈடு ஆய -சிறந்த, புல் அகம் - பலரும் தழுவுதற்குரிய மார்பினை, ஏய்க்கும் - தழுவும், புகழ் - நலமிக்க, வயலூரன் தன் - மருத நிலத்தூர்த் தலைவனது, நல் அகம் - நல்ல மார்பினை, சேராமை - தழுவாமை, நன்று - நல்லதாகும். (என்று தலைவி தனக்குட்டானே கூறினாள்) (விரி.) ஆடாவரங்கு - யாற்றுநீர்; குறிப்பு மொழி; கூத்தியர் ஆடுதலின்றிப் புனலாடுவார்க் கிடமாகலின் ஆடாவரங் கென்றனர். பரத்தையின் மார்பினை, 'ஈடாய புல்லகம்,' என்றது இழிவு கருதியென்க. இச் செய்யுளும் முந்தியதும் தலைமகன் தன்னைப் பிரிந்து சென்று பரத்தையுடன் புனலாடுஞ் செய்தி கேட்ட தலைவி மிகுந்த புலவியாற் கூறியனவாம். (129) இசையுரைக்கு மென்செய் திரநின் றவரை வசையுரைப்பச் சால வழுத்தீர் - பசைபொறை மெய்ம்மருட் டொல்லா மிகுபுன லூரன்றன் பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. [வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயின் மறுத்தது] (பத.) பசை - அன்பு காரணமாக, பொறை - மேற்கொள்ளப்பட்ட, மெய் மருட்டு - உண்மையான போக்கினை, ஒல்லா - கொண்டிராத, மிகு - மிக்க, புனல் ஊரன் தன் - நீர்வளமிக்க மருத நிலத்தூர்த்தலைவனது, பொய் மருட்டு - பொய்மையான மாய மொழிகளை, பெற்ற பொழுது - கேட்டபோது, என்செய் திரம் - என்பால் தலைவன் செய்யும் நிலையுடைக்காதற் செயல்களே, இசை - அவனது புகழினை, உரைக்கும் - எடுத்துக் காட்டுவனவாகும், (ஆகலின்,) நின்றவரை - கூடல் கருதி நிற்பவராகிய தலைவரை, வசை உரைப்ப - (உங்களுடைய புகழ் மொழிகளே அவர்தம்) இகழினை எடுத்துக் காட்டும்படி, சால - மிகுதியும், வழுத்தீர் - போற்றிக் கூறாது
|