நடவுங்கள். (என்று தலைவி வாயிலாக வந்தார்க்குக் கூறினாள்.) (விரி.) வாயில்கள் தலைவனை அளவு கடந்து புகழ்வது அவற்கு வசையாய் முடிதலின், "வசையுரைப்பச் சால வழுத்தீர்," என்றாள். திரம் - நிலையுடைய காதற் செயல்கள்: ஈண்டுக் குறிப்பால் நிலையுதலின்மையை யுணர்த்திற்று. என்கண் அவர் செய்திறமே அவரிசையினை யுணர்த்தும்; நீர் வறிதே வழுத்தீர் என்பது கருத்து. (130) மடங்கிறவு போலும்யாழ்ப் பண்பில்லாப் பாண! தொடங்குறவு சொற்றுணிக்க வேண்டா - முடங்கிறவு பூட்டுற்ற வில்லேய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய் கேட்டுற்ற கீழ்நாட் கிளர்ந்து. [பாணற்கு வாயின் மறுத்தது] (பத.) மடங்கு - மடக்கப்பெற்ற, இறவுபோலும் - இறால் மீனினைப்போன்ற, யாழ் - யாழினையுடைய, பண்பு இலா - நற் பண்புகளை மேற்கொண் டிராத, பாண - பாணனே! முடங்கு இறவு - வளைவுற்ற இறால் மீன்கள், பூட்டு உற்ற - நாணினாலே தொடுக்கட்பபட்ட, வில் - வில்லினை, ஏய்க்கும் - ஒத்திருக்கும், பூ பொய்கை - மலர்கள் நிரம்பிய பொய்கைகள் மிகுந்த, ஊரன் - மருத நிலத்தார்த் தலைவன், பொய் - பொய்மையான மொழிகளை, கேட்டு - தெரிந்து, உற்ற - பெற்ற, கீழ்நாள் சென்ற நாட் செய்திகளை, கிளர்ந்து - கிளர்தலாக எடுத்துச் சொல்லி, தொடங்கு உறவு - எமக்குள் தொடங்கப் பெற்றுள்ள உறவின் தன்மையினை, சொல் - நின்சொற்களினாலே, துணிக்கவேண்டா - துணிந்து கொள்ளுமாறு கூறவேண்டுவதின்று. (யாம் நன்கு அறிவேம், என்று தலைவி பாணனிடங் கூறினாள்.) (விரி.) தலைவன் பொய்ம்மொழிகளாகிய சென்றநாட் செய்திகளைப் பாணன் மெய்போல மயக்கிக் கூறுதலின், "பண்பிலாப் பாண!" என இழித்துக் கூறப்பட்டனன். கிளர்தல் - கிண்டல். (131) எங்கை யரிலுள்ளா னேபாண! நீ பிறர் மங்கையரி லென்று மயங்கினாய் - மங்கையரி
|