லென்னா திறவா திவணின்னி கந்தேகல் பின்னாரி லந்தி முடிவு. [இதுவுமது] (பத.) எங்கையர் இல் - என் பின்னவர்களாகிய பரத்தையர்தம் மனையகத்தே, உள்ளானே பாண - உள்ளவனாகிய பாண்மகனே! நீ பிறர் - நீ (எனக்குப்) பிறராயுள்ள, மங்கையர் - பரத்தையரினது, இல் என்று - மனை யென்று, மயங்கினாய் - (என் மனையைப்) பிறழ வுணர்ந்து வந்து விட்டாய், பின்னார் - என் பின்னவர்களாகிய பரத்தையரின், இல் - மனையகத்தே (இப்பொழுது,) அந்தி - மாலை வேளையின், முடிவு - இறுதியாகிய மணவிழாத் தொடக்க வேளையாகும், (ஆகலின்,) மங்கையர் இல் என்னாது - மீண்டும் எம் மனையினை அப்பரத்தையர் மனையெனக் கருதாது, இறவாது - (வேறு எவர் மனையினையும் இம் முறையிலே) தவறாகக் காணாது, இவண் இன் இகந்து-இவ்விடத்திருந்து நீங்கி. ஏகல் - (மணவிழாத் தொடக்க வேளையினையுடைய பரத்தையர் மனைக்குச்) செல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.) (விரி.) எங்கையர் - எமது தங்கையர்: தலைவனால் பின்பு வரிக்கப்பட்ட பரத்தையர். செய்யுளில் பெரிய எழுத்துக்களில் உள்ளன உய்த்துணரப்பட்டனவாம். ஏகல் -அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள் வினை முற்று. (132) பாலையாப் பாண்மகனே! பண்டுநின் னாயகற்கு மாலையா ழோதி வருடாயோ - காலையாழ் செய்யு மிடமறியாய் சேந்தாநின் பொய்ம்மொழிக்கு நையு மிடமறிந்து நாடு. [இதுவுமது] (பத.) பாலையாழ் - பாலையென்னும் பண்ணினாற் சிறந்த யாழினையுடைய, பாண்மகனே - பாணனே! பண்டு - முன்பு, நின் நாயகன் கு - நின் தலைவனுக்கு, மாலை யாழ் - மாலைக் காலத்தே பாடவேண்டிய
|