17

(விரி.) சேட்படுத்தல் - நெருங்கவொட்டாது விலக்கல். ஆற்றாமை - பொறுக்க முடியாமை. நாகம் - முதலாகு பெயர். மடன்மாமே லூருதல் - தலைவியைப் பெற முடியாது போயின விடத்துத் தலைவன் மேற்கொள்ளும் வினையாம். அவ்வினை இவ்வைந்திணைக்கும் அடங்காப் பெருந்திணையின்பாற்படும். அது பனைமடலாகிய கருக்கினாலே குதிரை யொன்று செய்து அதன்கண் தலைவன் மெய்யெல்லாம் நீறு பூசி எலும்பு மாலை யணிந்து தலைவியின் வடிவ மெழுதிய ஓவியத்தைக் கையிற் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கத் தலைவனைச் சார்ந்தோர் அக் குதிரையினைச் சிறிய சகடமொன்றினிற் சேர்த்துத் தலைவியின் வீதி வழியே இழுத்துச் செல்வதாம். அப்பொழுது தலைவியின்மேலுள்ள காதலால், தலைவன் பனைமடலால் உண்டாம் நோயினைப் பொருட்படுத்தாது செல்வன். அதனைக் கண்ட தலைவியின் உற்றார் வியந்து தலைமகளை அவனுக்கு மணம் புரிவிப்பர்.

(16)

அறிகவளை யைய விடைமடவாய்! ஆயச்
சிறிதவள்செல் லாளிறுமென் றஞ்சிச்-சிறிதவ
ணல்கும்வாய் காணாது நைந்துருகி யென்னெஞ்ச
மொல்குவா யொல்க லுறும்.

[நின்னாற் சொல்லப்பட்டவளை அறியேனாலோ என்ற
தோழிக்குத் தலைமகன் அறிய வுரைத்தது]

(பத.) மடவாய் - இளமை மிக்க தோழியே! அவளை அறிகு - (யான்) அவளை (நன்கு) தெரிவேன், ஐயம் - (உண்டோ இலையோ என்று ) ஐயமுறுதற் கிடமான, இடை - இடுப்பானது, ஆய - வருந்தும்படியாக, அவள் சிறிது செல்லாள் - தலைவி சிறிது தொலை செல்வதற்கு முன்னரே, என் நெஞ்சம் - எனது மனமானது, இறும் என்று அஞ்சி - (அவ்விடை) இற்று விழுந்து விடுமே என்று பயந்து, அவள் சிறிது நல்கும் வாய் - அவள் சிறிதும் என்பால் அன்புகாட்டும் நெறியினையும், காணாது - அறிய வியலாது, நைந்து - தளர்ந்து, உருகி இளக்கமுற்று, ஒல்கும் வாய் - (தலைவியின்) தளர்நடையினைக் காணுந்தோறும், ஒல்குல் உறும் - அவள் பின்