மாறுபட்டு, வாடாள் - துன்புறாதவளாய் (ஏற்றுக்கொள்வாள், என்று தலைவனிடந் தோழி கூறினாள்.) (ப-ரை.) பொன்றளரும் மேனியாள் வேங்கைப் பூப் போன்ற சுணங்கினையுடைய மென்முலைகள் எற்றுக்கு யான் மெலியப் புடைத்து வீங்கின, என்னே பாவமென்று சொல்லி நீ மெலிதற்குக் காரணமென்னை? நீ கொணர்ந்த குறுங் கண்ணிகள் வாடாத வகை யான் கொண்டு சென்று இவை நல்ல வென்று காட்டினால், அவ்வுண் கண்ணிதான் மாறுபட்டுத் துன்புறாள் வாங்கும். (விரி.) ஏன்று கொளல் - ஏற்றுக் கொள்ளல். எதிர்தல் - பெறுதல், அண் கண்ணி - கையுறை. அண்மை - குறுமை. கண்ணி-பூமாலை (21) கொல்யானை வெண்மருப்புங் கொல்வல் புலியாதளு நல்யானை நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தா மோரம்பி னானெய்து போக்குவர்யான் போகாம லீரம்பி னாலெய்தா யின்று. [பகற்குறிக்கட் டலைமகள் குறிப்பன்றிச் சார்கிலாத தலைமகன் றனதாற்றாமை சொல்லியது.] (பத.) நல் யானை - நல்ல யானையினைப் போன்ற, நின் ஐயர் - நின்னுடைய தமையன்மார்கள், கொல் யானை - கொல்கின்ற யானையின், வெண் மருப்பும் - வெண்மையான கொம்புகளையும், கொல்வல் - கொல்லும் வலிமைமிக்க, புலி அதளும் - புலித் தோல்களையும், கூட்டு உண்டு -திறையாகக் கொண்டு, செல்வார் - நடப்பவராகி, (இப்புனத்தின்கண் வருபவர்களாகிய பிறரை,) ஓர் அம்பினான் - ஓரம்பினாலே, எய்து - தாக்கி, போக்குவர் - ஒழிப்பர், (ஆனால், நீயோ) யான் - நான், போகாமல் - இவ்விடத்தை விட்டு நீங்காமலிருக்கும்படி, இன்று - இப்பொழுது, ஈர் அம்பினால் - நின் கண்களாகிய இரண்டம்புகளினாலே, எய்தாய் - தாக்கினாய், (என்று தலைவன் தலைவியை நோக்கிச் சொன்னான்.) (ப-ரை.) கொல் யானைகளினுடைய வெண்மருப்பையுங் கொலைவல்ல புலித் தோல்களையும் நல்யானை போன்ற
|