26

(விரி.) ஓ - அசைநிலை. வேழம், பிழைத்து, நாடுவ போல், இரா வேலேந்தி, நடுநடுப்ப வாரல், என முடிக்க.

(25)

கருங்கா லினவேங்கை கான்றபூக் கன்மே
லிருங்கால் வயவேங்கை யேய்க்கு-மருங்கான்
மழைவளருஞ் சார லிரவரின் வாழா
ளிழைவளருஞ் சாய லினி.

[இதுவுமது]

(பத.) இழை - அணிகலன்களாலே, வளரும் - மிகுந்து காணப்படும் (அழகினை,) சாயல் - (இயல்பாகவே கொண்ட) எழிலினையுடைய தலைவி, இனி - மேலும், கரும் கால் - கரிய அடிப்பாகத்தையுடைய, இனம் வேங்கை - கூட்டமாகிய வேங்கை மரங்கள், கான்ற - சொரிந்த, பூ - மலர்கள், கல் மேல் - பாறைகளின் மீதே (படிந்து), இரும் கால் - பெரிய கால்களையுடைய, வயம் வேங்கை - வெற்றிமிக்க பெரும்புலியினை, ஏய்க்கும் - ஓத்திருக்கும்படியான, மருங்கு ஆல் - இடங்களோடு (கூடி), மழை வளரும் - மழை விடாது பெய்யும்படியான, சாரல் - மலைப்பக்கத்தின் வழியே, இரவரின் - இராக் காலத்தே நீ வருவாயாயின், வாழாள் - உயிர் தரிக்க மாட்டாள். (மிகவும் வருந்துவள், என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) கருங்காலினையுடைய இனவேங்கை கன்மேலுகுத்த பூக்கள் பெரியதாளினையுடைய வயப்புலியை யொக்குகின்ற மருங்கான் மழைவளருஞ் சாரலானே இரவின்கண் நீவரின், உயிர்வாழ மாட்டாள்; இழை வளருஞ் சாயலாள்.

(விரி.) மருங்கு ஆல் - ஆல் உடனிகழ்ச்சிப் பொருள் கொண்டுள்ளது. சாயல் - பண்பாகு பெயர்.

(26)


பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் னாட!
இனிவரையா யென்றெண்ணிச் சொல்வேன்-முனிவரையு