29

கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தானாறத் தாழ்ந்த விடம்.

[பகற்குறிக்கண் இடங் காட்டியது.]

(பத.) எழுந்த - மிகவும் உயர்ந்து காணப்படும், பலா பால் - பலாமரத்தின் பக்கத்திலே, வருக்கை - பலா மரங்களால், பாத்தி - பகுத்துப் பிரிக்கப்பட்ட, அதன் நேர் - அப் பலாத் தோட்டத்தின் நடுவே, நிலா - நிலவொளியானது, எழுந்த பொருந்திக் காணும்படியான, வார் - மிகுந்த, மணல் - மணலானது, நீடி - உயந்து, சுலா எழுந்து - வட்டமாகப் பரவித் தோன்றி, கான்யாறு - (அருகே யுள்ள) காட்டாற்றுப் பெருக்கினாலே, கால்சீத்த - ஒழுங்கு பண்ணப்பட்ட, காந்தள் அம் பூ - காந்தளின் அழகிய பூக்கள் (மிகுந்து காணும்படியான,) தண் - குளிர்ந்த, பொதும்பர்தான் - சோலையே, நாற - நறு நாற்றங் கொள்ளும்படி, தாழ்ந்த - (யானும் என் தலைவியும் பகற் பொழுது) தங்கி விளையாடிய, இடம் - இடமாகும். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்)

(ப-ரை.) பலா வெழுந்த மருங்கின்கண் வருக்கைப் பலாக்களாற் பாக்கப்பட்டத னடுவே நிலாவொளி மிக்க ஒழுகிய மணலுயர்ந்து வளைந்து தோன்றி, கான்யாறுகள் இடங்களெல்லாஞ் சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தான் விரை கமழ்ந்து தழைத்தவிடம், யாங்கள் பகலின் கண் விளையாடுமிடம்.

(விரி.) பகற்குறி - தலைவனும் தலைவியும் பகற் காலத்தே தம்முள் எதிர்ப்பட்டுக் கூடுமிடம். இப்புணர்ச்சி பாங்கியின் உதவியால் நிகழ்வதாம். இவ்விடம் தினைப்புனத்தினை யடுத்த வொரு சோலையாம், பாங்கியிற் கூட்டத்தினை விரும்பிய தலைவற்குப் பாங்கி நேர்ந்து, தான் தலைவியைக் கொண்டுவந்து சேர்க்குமிடம் இது வெனக் கூறுகின்றனள். இது குறிப்பாக விளையாடிய விடம் எனக் கூறப்படுதல் களவுப் புணர்ச்சி கருதிய தென்க.

(29)

திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித்
தங்களு ளாளென்னுந் தாழ்வினா - லிங்கட்