37

காதல் - (உம்மேலுள்ள) அன்பினால் (துன்புற்று,) நீர் வாராமை - (இவள் கண்கள்) நீர் வரப்பெறாமலும், கண் - நுங் கண்களால், நோக்கி - (இவள் வேறுபாட்டைக்) கூர்ந்து பார்த்து, வாராது - (இவ்வாறு)வருதலைச்செய்யாது, அலர் ஒழிய - (இவள் மேல் கூறப்படும்) பழிச் சொற்கள் நீங்கும்படியாக, மன்று - உறவினராகிய கூட்டத்தார், அறிய - தெரிந்திருக்கும்படியாக வரைந்து கொள்ளீர் - (இவளை) மணம் புரிந்து கொள்வீராக. (என்று தோழி தலைவனிடம் கூறினாள்.)

(ப-ரை.) ஓத நீர் வேலியை யுடைய பாக்கத்தார் உரையாற் கடியாது உம்மேலுள்ள காதலாற் றுன்புற்று இவள் கண்கள் நீர் வாராத வகை இவண்மாட்டு வேறுபாட்டைப் பார்த்து முன்பு நீரி்வட்குச் சொல்லிய வஞ்சினத்தை ஓத நீர் அறியுமாதலான், இவ்வாறு வாராது அலரொழியும் வகை மன்றத்தாரறிய வரைந்து கொள்ளீர்.

(விரி.) கடியா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். மன்று - மணவிழாக் கூட்டம்.

(37)

மாக்கடல்சேர் வெண்மணற் றண்கானற் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்பணங்கா - மாக்கடலே!
என்போலத் துஞ்சா யிதுசெய்தார் யாருரையா
யென்போலுந் துன்ப நினக்கு.

[காமமிக்க கழிபடர் கிளவி]

(பத.) மா கடல் - பெருங்கடலின் (அலைகளினாலே), சேர் - (வந்து) சேர்ந்த, வெண் மணல் - வெள்ளிய மணலினையுடைய, தண்கானல் - குளிர்ந்த கடற்கரைச் சோலையின் கண்ணே, பாய் - பரவுகின்ற, திரை சேர் - அலைகளோடு கூடிய, மா கடல் - பெரிய கடலினை, சேர் - சார்ந்த, தண் பரப்பன் - குளிர்ந்த இடத்தை யுடைய தலைவனது, மார்பு அணங்கா - மார்பினாலே வருத்த முறாத, மா கடலே - பெரிய கடலே! என் போல - என்னைப் போல, துஞ்சாய் - உறக்கங்கொள்ளாது எப்பொழுதும் ஒலமிட்டுக்கொண்டிருக்கின்றாய், என் துன்பம் போலும் - எனது துன்பத்தைப் போன்ற, இது - இவ்வுறங்காமை யாகிய கொடுமையினை, நினக்கு - உனக்கு, செய்தார் -