39

(ப-ரை.) வந்து சேர்ந்தார்க்கு ஏமமாம் இளமணற் றண்கழிக் கானலிடத்து வந்து, முன்பு பூவாதே பூத்த இள ஞாழற் பூவினை இவட்குத் தந்தவர்க்கே யாமால், இவள் தடமென்றோள்; இந்நாள் வதுவை வரையப் புகுந்தார்க்கா மென்பாருடைய மெய்யுரையைக் காண்போம்.

(விரி.) நொதுமலர் - அயலோர். வரைந்து - வரைய. ஏ - தேற்றம், பிரிநிலை. ஆல் - அசை. முதன் முதலாகப் பூத்த ஞாழல் என்பார், "பூவா விளஞாழல்," என்றார். இது பூத்தரு புணர்ச்சி.

(39)

தன்றுணையோ டாடு மலவனையுந் தானோக்கா
வின்றுணையோ டாட வியையுமோ - வின்றுணையோ
டாடினாய் நீயாயி னந்நோய்க்கென் னொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து.

[வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது]

(பத.) தன் - தனது, துணையோடு - பெட்டை நண்டுடன், ஆடும் - (இன்புற்று) விளையாடும், அலவனையும் - ஆண் நண்டினையும் என்னையும், தான் - அவன், நோக்கா- பார்த்து, (தன்னுள்) இன் துணையோடு - (என்) இனிய துணைவியாகிய தலைவியோடு, ஆட - (இவ்வகை இன்புற்று) விளையாட, இயையுமோ - (எனக்கு) வாய்க்குமோ? (என்று கூறிக் கொண்டவனாகி, ஆண் நண்டினை நோக்கி,) நீ இன் துணையோடு - நீ உனது இனிய துணையாகிய பெட்டை நண்டுடன், ஆடினாய் ஆயின் - இன்புற்று விளையாடுதலாகிய வொன்றையே செய்திருப்பாயானால், (பிரிவுத்துன்ப மென்பதனை அறியாய் ஆதலான்,) அந்நோய் - அப்பிரிவுத் துன்பத்தினை, நொந்து - (நினக்கெடுத்துச் சொல்லி) வருந்தியதால், என் - யாது பயன்? என்று - எனச் சொல்லிவிட்டு, போயினான் - (இவ்விடத்தை விட்டு) அகன்றான், புரிந்து - (மீண்டும்) விருப்பத்தை மேற்கொண்டு (வருதலைக் கருதாதவனாய்,) சென்றான் - (காணப்படாதவனாய்ப்) போய்விட்டான். (என்று தோழி தலைவியிடங் கூறினாள்.)

(ப-ரை.) தன் பெடை ஞெண்டொடு இன்புற்று விளையாடும் அலவனையும் என்னையும் பார்த்து, "என்னுடைய