40

இனிய துணையோடு இப்பெற்றி போல ஆட எனக்குக் கூடுமோ? நின்னுடைய இன்றுணையாகிய பெடை ஞெண்டுடனே விளையாடினாய் நீயாயிற் பிரிவுத் துன்பம் அறியா யாதலான், அப்பெற்றிப்பட்ட நினக்கு என் பிரிவுத்துன்பத்தைச் சொல்லி நொந்து என்னை," என்று சொல்லிப் போயினவன் பின்னை வந்து மேவித் தோன்றுகின்றிலன், என் செய்தானோ!

(விரி.) வலிதாக - மனத்தில் நன்கு பதியும்படியாக அலவனையும் - உம்மை எச்சப் பொருளது. தான் - அவன்: தலைவன். நோக்கா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தலைவன் மனவெறுப்புக் கொண்டு போய்விட்டான் எனபார். "போயினான் சென்றான் புரிந்து," என்றார். தோழி முன்பு மெலிதாகக் குறை நயந்து கூறியதில் தலைவி இணங்காதிருந்தமையின், அவள் காதலன் வெறுப்புற்றுச் சென்றுவிட்டான் என வலிதாகக் கூறிக் குறை நயக்கலாயினள்.

(40)

உருகுமா லுள்ள மொருநாளு மன்றாற்
பெருகுமா னம்மலர் பேணப் - பெருகா
வொருங்குவான் மின்னோ டுருமுடைத்தாய்ப் பெய்வா
னெருங்குவான் போல நெகிழ்ந்து.

[தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்
கப்பட்டுத் தலைமகள் தனதாற்றாமையாற் சொல்லியது]

(பத.) ஒருங்கு - ஒன்றாக, பெருகா - பெருகி, வால் - வெள்ளிய, மின்னோடு - மின்னல்களுடன், உரும் - இடிகளையும், உடைத்தாய் - கொண்டு, பெய்வான் - பெய்தற்கு வேண்டி, நெருங்கு - நாற்புறமும் சூழ்கின்ற, வான் - மழையினை, போல - போன்று, பேண - (ஏதிலார்) விரும்பும் வண்ணம், நம் அலர் - நம்மீது கூறப்படும் பழிச் சொற்கள், பெருகும் - மிகாநின்றன, ஆல் - ஆகலான், ஒரு நாளும் அன்று - ஒருநாளு மன்றி, (பல நாளும்,) உள்ளம் - நம் மனம், நெகிழ்ந்து - கசிந்து, உருகும் - வருந்தாநிற்கும்.

(ப-ரை.) ஒருங்கு பெருகி வாலிய மின்னோடு உருமுடைத்தாகிப் பெய்யவேண்டி நெருங்குகின்ற மழை