தொடியின்கண் அழுத்திய முத்தங்கள் திரண்டு. (விரி.) நயப்பு - குறை நயப்பு: தலைவன் தன் குறைகளைத் தோழியிடம் நயமாகத் தெரிவித்தல். தான் - அசை. கையுறை - தலைவன் தான் தலைவிக்குக் கொண்டு வந்த பரிசுப் பொருளாகிய கையுறையினைப்பற்றிக் கூறல். "கடிகையிடை முத்தம் காண்டொறும் தொடிகை யிடை முத்தந் தொக்கு நில்லா," எனக் கையுறையாகிய துறைக்குக் கொள்க, கடிகையிடை முத்தங்கள் தொக்கு நிற்பதுபோல் கையுறையாகிய முத்தங்கள் தொடிகையிடை நிற்க வியலாதனவாய் என் கையகத்து வறிதேயுள்ளன என்பது கருத்தாம், நச்சினார்க்கினியர் இதனைக் கையுறை கொண்டு வந்து கூறியதாகக் கொண்டு, இதன் கண், "நின் வாயிதழையும் எயிற்றையுங் காணுந்தொறும் என்கையிடத்தில் இருக்கின்ற பவளக் கொடியும் முத்தும் நில்லா என்க," என வுரைப்பர் (தொல். பொ. கள. 11.) (42) கடற்கோ டிருமருப்புக் கால்பாக னாக வடற்கோட் டியானை திரையா - வுடற்றிக் கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல் வரைவாய்நீ யாகவே வா. [தலைமகனைத் தோழி வரைவு கடாயது] (பத.) கடல் - கடலின்கண்ணுள்ள, கோடு - சங்குகள், இரும்மருப்பு (ஆக) - பெரிய கொம்புகளாகவும், கால் - வீசுகின்ற காற்றானது, பாகன் ஆக - யானைப் பாகனாகவும், திரை - அலையானது, அடல் கோடு யானை ஆ - கொல்லுகின்ற கொம்பினையுடைய யானையாகவும் (அமைந்து,) கரை - கடற்கரையினை, பாய்ந்து உடற்று - குத்தி வருத்தும்படியான, நீள் - பெரிய, சேர்ப்ப - துறை முகத் தலைவனே! கனை இருள் - மிகுந்த இருளையுடைய இரவின்கண், வாரல் - வாராதிருப்பாயாக, (வருதலை வேண்டின்,) நீ வரைவாய் ஆகவே - நீ மணத்தற்குரியையாகவே, வா - வருவாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) கையிடைத் தொடியின்கண் அழுத்திய முத்தங்கள் திரண்டு. (விரி.) நயப்பு - குறை நயப்பு: தலைவன் தன் குறைகளைத் தோழியிடம் நயமாகத் தெரிவித்தல். தான் - அசை. கையுறை - தலைவன் தான் தலைவிக்குக் கொண்டு வந்த பரிசுப் பொருளாகிய கையுறையினைப்பற்றிக் கூறல். "கடிகையிடை முத்தம் காண்டொறும் தொடிகை யிடை முத்தந் தொக்கு நில்லா," எனக் கையுறையாகிய துறைக்குக் கொள்க, கடிகையிடை முத்தங்கள் தொக்கு நிற்பதுபோல் கையுறையாகிய முத்தங்கள் தொடிகையிடை நிற்க வியலாதனவாய் என் கையகத்து வறிதேயுள்ளன என்பது கருத்தாம், நச்சினார்க்கினியர் இதனைக் கையுறை கொண்டு வந்து கூறியதாகக் கொண்டு, இதன் கண், "நின் வாயிதழையும் எயிற்றையுங் காணுந்தொறும் என்கையிடத்தில் இருக்கின்ற பவளக் கொடியும் முத்தும் நில்லா என்க," என வுரைப்பர் (தொல். பொ. கள. 11.) (43) கடற்கோ டிருமருப்புக் கால்பாக னாக வடற்கோட் டியானை திரையா - வுடற்றிக் கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல் வரைவாய்நீ யாகவே வா. [தலைமகனைத் தோழி வரைவு கடாயது] (பத.) கடல் - கடலின்கண்ணுள்ள, கோடு - சங்குகள், இரும்மருப்பு (ஆக) - பெரிய கொம்புகளாகவும், கால் - வீசுகின்ற காற்றானது, பாகன் ஆக - யானைப் பாகனாகவும், திரை - அலையானது, அடல் கோடு யானை ஆ - கொல்லுகின்ற கொம்பினையுடைய யானையாகவும் (அமைந்து,) கரை - கடற்கரையினை, பாய்ந்து உடற்று - குத்தி வருத்தும்படியான, நீள் - பெரிய, சேர்ப்ப - துறை முகத் தலைவனே! கனை இருள் - மிகுந்த இருளையுடைய இரவின்கண், வாரல் - வாராதிருப்பாயாக, (வருதலை வேண்டின்,) நீ வரைவாய் ஆகவே - நீ மணத்தற்குரியையாகவே, வா - வருவாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)
|