பண்ணாது பண்மேற்றே பாடுங் கழிக்கான லெண்ணாது கண்டார்க்கே யேரணங்கா - லெண்ணாது சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக் காவார் கயிறுரீ இவிட் டார். [பாங்கன் றலைமகனைக் கண்டு தலைமகளை வியந்து சொல்லியது] (பத.) பண்ணாது - (யாழினைக் கொண்டு) இசைக் காமலே, பண் -.இசையானது, மேல் மேன்மையுற, தே - தேன்வண்டுகள், பாடும் - இசைக்கும்படியான, கழி-கடற்கழிகளையுடைய, கானல் - கடற்கரைச் சோலையானது, எண்ணாது - (எதனையுங்) கருதாது, கண்டார் கு ஏ - காண நேர்ந்தவர்களுக்கே, ஏர் அணங்கு - இயற்கையழகால் இனிய தெய்வமாகக் காணப்படும், எண்ணாது - (இவ்வுலக வாழ்க்கையைக்) கருதாது, சாவார் - (இறைவனையே எண்ணி) இறந்துபடும் பெரியோர்களின், சான்று ஆண்மை - மனவமைதியாகிய உறுதிப்பாட்டின் முன்னும், சலித்திலா - வேறுபடாத, இவளை - இத்தலைவியை, காவார் - (இவளின் பெற்றோர் மனையின்கண் வைத்துப்) பாதுகாத்தலைச் செய்யாராய், (அச் சோலைக்கண்), கயிறு உரீஇ -(கொல்லேற்றினது) கட்டுக்கயிற்றை யவிழ்த்துப் (பலர்க்குந் தீங்கு பயக்குமாறு விட்டாற்போல,) விட்டார் - (தலைவியினைப் போக) விட்டு விட்டார்கள். (என்று பாங்கன் தலைவனிடத்திற் கூறினான்) (ப-ரை.) யாழினைப் பண்ணாது பண்மேற் சேரத் தேன்கள் பாடுங் கழிக்கானலின்கண் ஆராயாதே வந்து கண்டார்க்கே அழகிய தெய்வங்களாம்; ஆதலான், அறிவினா னாராயாது இறந்துபடுவார் சான்றாண்மையின் கண் வேறுபட்டிலா மற்றிவளைக் காவாது கயிறுரீஇ விட்டார் சான்றாண்மையின் வேறு பட்டார். (விரி.) தேன்+பாடும்=தேபாடும். தலைமகளின் உயர் வினைக் கண்டு சென்ற பாங்கன் தலைமகன்பால், "இயற்கை யழகான்மிக்க அச் சோலையின்கண் நின்னாற் காதலிக்கப் பட்டாள் காணப்படுவது கொல்லேற்றினைப் பாதுகாவாது கயிற்றினின்று விடுவித்து விட்டதனைப் போன்று ஆண்
|