48

'பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது' (தொல், கள, 23) என்பர்,

(49)

எங்கு வருதி யிருங்கழித் தண்சேர்ப்ப!
பொங்கு திரையுதைப்பப் போந்தொழிந்த - சங்கு
நரன்றுயிர்த்த நித்தி்ல நள்ளிருள்கால் சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து.

[இதுவுமது]

(பத.) இரும் கழி - பெரிய உப்பங்கழிகளையுடைய தண் - குளிர்ந்த, சேர்ப்ப - கடற்கரைத் தலைவனே! வரன்று - (அலைகள் கொண்டுவந்து கரைக்கண் சேர்த்த கடல் வளங்களை) வாரிக்கொண்டு சென்று, உயிர்த்த - வாழ்க்கையை நடத்தும் (மக்கள் நிரம்பிய,) பாக்கத்து - பட்டினத்திடத்தே, பொங்கு - மிகுந்துவரும்படியான, திரை - அலைகள், உதைப்ப - வெளியே தள்ள, போந்து - கரைக்கண் வந்து, ஒழிந்த - தங்கிய, சங்கு - சங்குகள், நரன்று - ஒலித்துக்கொண்டு, உயிர்த்த - ஈன்ற, நித்திலம் - முத்துக்கள், வந்து - புகுந்து, நள் - செறிந்த, இருள் - இருளினை, கால் சீக்கும் - விலக்கும், (அங்ஙனமிருக்க,) எங்கு வருதி - எவ்விட மறைவுகொண்டு வருவாய்? (நின்களவினைப் பலருங்காண அலர் பெருகுமாகையான் இரவுக்குறியினை எண்ணாதொழிக, எனத் தோழி தலை மகனிடம் மறுத்துரைத்தனள்.)

(ப-ரை.) எவ்விடத்தானே வருவாய் இருங்கழித் தண் சேர்ப்பனே! பொங்கு திரைகளானே யுதைக்கப்பட்டுப் போந்து கரையின்கட்டங்கிய சங்குகள் கதறிப் பொறையுயிர்த்த முத்தங்கள் செறிந்த இருளை இடங்களினின்றுஞ் சீயாநிற்கும்; திரை கொணர்ந்து போதவிட்டனவற்றைக் கண்டார் வரன்றாநின்ற பாக்கத்தின்கண்.

(விரி.) சேர்ப்ப! நித்திலம் பாக்கத்து வந்து, இருள்கால் சீக்கும்: ஆதலான் எங்கு வருதி? என முடிக்க.

(50)

திமில்களி றாகத் திரைபறையாப் பல்புட்
டுயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போற்