49

குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப!
நெறியானீ கொள்வது நேர்.

[தோழி வரைவு கடாயது]

(பத.) கோலம் - அழிகிய, நீர் - கடனீரினையுடைய, சேர்ப்ப - துறைமுகத்தலைவனே! திமில் - தோணியினை, களிறு ஆக - யானையாகவும், திரை - அலையினை, பறையா - பறைவாத்தியமாகவும், பல் புள் - பல கடற் பறவைகளினை, துயில் கெட - உறக்கங் கெடும்படியாக, தோன்றும் - வெளிப்படும், படையா - படையாகவும் (கொண்டு,) துயில் போல் - கனாக்கண்டாற் போன்று, குறியா - இன்ன தென்று தெளிய முடியாத, வரவு - (களவின்கட் டனியே வரும்படியான நினது) வருகையானது, ஒழிந்து - விலகப் பெற்று, நெறியால் - மணச்சடங்கு முறைப்படி, நீ கொள்வது - நீ (இவளை) மணந்துகொள்வது, நேர் - (நினக்குத்) தகுதியானதாகும். (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

(ப-ரை.) திமிலே களிறாகத் திரையே பறையாகத் துயில் கெடத்தோன்றும் படை புட்களாக, கனாக் கண்டாற்போலத் தேறமுடியாத களவின்கட் டனியே வரும் வரவினை யொழிந்து, கோலநீர்ச் சேர்ப்பனே! நெறியானே வரைந்து இவளைக் கொள்வது நினக்குத் தகுதி.

(விரி.) சேர்ப்ப, வரவொழிந்து, கொள்வது நேர், என முடிக்க, களிறாக, பறையா, படையா (கொண்டுள்ள) குறியா வரவு, எனக் கூட்டுக. இங்குத் தலைவன் நெய்தனிலத்திற் குரியனாகலின் அவன் இங்ஙனங் கூறப்பட்டானென்க. தலைவற்கும் தலைவிக்கும் துயிலினை விலக்கி இரவுக்குறிக்கண் எதிர்ப்படச் செய்தலிற் புட்கள் இன்றியமையாதனவாயிருத்தலின், "பல்புட் டுயில் கெடத் தோன்றும் படையா," எனக் கூறினார். திமில் - மரக்கல மெனினுமாம். துயில் - இடவாகு பெயர்.

(51)

கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கட்
படும்புலால் பார்த்தும் பகர்து - மடும்பெலாஞ்