காணப்படும், கடல் - கடற்காட்சியினையுடைய, சேர்ப்ப - துறைமுகத் தலைவனே! எமர் முன் - எம்மவர்களாகிய சுற்றத்தார்க்கு முன்னே, கிளர்ந்து - சென்று, எய்த்ல் - (மணச்சடங்கின்படி இவனைப்) புணர்தலை, முடி - (செய்து) முடிப்பாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) பாறே குதிரையாக நீண்ட திமிலே பல களிறுகளாகத் தெளிந்த திரையே பறையாகப் புட்களே படையாகத் தேறாத வேந்துகள் படை யெழுந்து கிளர்ந்தன போலுங் கடற் சேர்ப்பனே! எமருடைய முன்னே சென்று இவளை நீயே புணர்தலை முடிப்பாயாக. (விரி.) மற்று - அசைநிலை. கிளர்தல் - எழுதல், புறப் படல், செல்லல், (54) வாராய் வரினீர்க் கழிக்கான னுண்மணன் மேற் றேரின்மா காலாழுந் தீமைத்தே - யோரிலோர் கோணாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர் நாணாடி நல்குத னன்று. [இதுவுமது] (பத.) வாராய் - (தலைவனே! நீ இங்ஙனம் இரவின் கண்) வருதலைச் செய்யாதிருப்பாயாக, வரின் - வருதலைச் செய்வாயாயின், நீர் கழி கானல் - நீர் நிறைந்த கடற்கழிகளோடு கூடிய சோலையிலேயுள்ள, நுண்மணல் மேல் - நுட்பமான மணலினிடத்தே, தேரின் மா - (உனது) தேரிற் பூட்டியுள்ள குதிரையின், கால் - கால்கள், ஆழும் - புதைந்து போகும்படியான, தீமைத்து - பொல்லாங்கு மிகுந்துளது, (ஆகலான்,) ஓரில் - நன்கு ஆராய்ந்து பார்க்கின், ஓர் - ஒத்த குலத்தாராகிய நமக்குள், கோள் - (மணப்பொருத்த முதலிய தொடர்ச்சி) கோடலை, நாடல் - (ஐயுற்று) ஆராய்தல், வேண்டா - வேண்டுவதின்று, குறி அறிவார் - நிமித்த மறியும் கணிகளை, கூஉய்கொண்டு - வரவழைத்து, ஓர் நாள் - ஒரு நல்ல மண நாளை, நாடி - பார்த்து, (மணம் புரிந்து,) நல்குதல் - (நீ இவட்கு) நன்மை புரிதல், நன்று - நல்லதாகும், (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)
|