53

(ப-ரை.) வாராதொழிவாயாக; வருவையாயின், நீர்க்கழிக்கானல்தான் நுண்மணன்மேல் நின்றேர் பூண்ட குதிரை காலாழுந் தீமையுடைத்து; ஆதலான், ஒத்த குலத்தார்க்குத் தொடர்ச்சி கோடலை ஐயுற் றாராய்தல் வேண்டா; நிமித்த மறிவாரை யழைத்து நல்லதொரு நாளை நாடி இவட்கு நல்குதல் நன்று.

(விரி.) கூஉய் - சொல்லிசை யளபெடை. நல்குதல் - புணர்ச்சி யின்பத்தினை யளித்தல். கணி - சோதிடன்.

(55)

கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வறேர்
மண்பரக்கு மாயிருண் மேற்கொண்டு - மண்பரக்கு
மாறுநீர் வேலைநீ வாரல் வரினாற்றா
ளேறுநீர் வேலை யெதிர்.

[இதுவுமது]

(பத.) நீர் வேலை - நீரினை நிறையக்கொண்ட கடலையுடைய தலைவனே! கண் - (இவள்) கண்கள், கடும்பனி - மிக்க துன்பத்தாலாகிய நீரினை, பரப்ப - வெளிவிடுவதை, காணாய் - காண்பாயாக, கால் வல் தேர் - காலின் வன்மை மிகுந்த தேரினிடத்தே, மண் - உலக மெங்கும். பரக்கும் - பரவி யிருக்கும், மா இருள் - மிகுந்த இருளோடு கூடிய இராக் காலத்து, மேல் கொண்டு - அமர்ந்து, மண் - உலக மெல்லாம், பரக்கும் ஆறு -(பழிச் சொற்கள்) நிரம்பும்படி, நீ வாரல் - நீ வருதலைச் செய்யா திருப்பாயாக, வரின் - வருவாயாயின், ஏறுநீர் - (எதிர்த்துக் கரையின்மீதே) ஏறி வரும் அலைகளையுடைய, வேலை எதிர் - கடலின் எதிரிலுள்ள இப்பாக்கத்தினிடத்தே, ஆற்றாள் - இவள் பொறுக்க வியலாது வாழாள். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) இவளுடைய கண்களும் மிக்க நீர் பரப்பக் காணாய்; கால்வலிய தேரில் மண்ணெல்லாம் பரக்கும் பெரிய இருண் மேற்கொண்டு உலகமெல்லாம் நிவந்த அலர் பரக்குமாறு, நீருண்ட வேலையையுடையாய்! வாரல்; வருவையாயின், இவளுயிர் வாழாள்: ஒதமேறாநின்ற நீர் வேலையினெதிரே.