54

(விரி.) பனி - துன்பத்தாலுண்டாகும் கண்ணீர்: காரணவாகு பெயர். கால் - சக்கிரம். மண்பரக்கு மாயிருளில் தேர் மேற் கொண்டு, பரக்குமாறு வாரல் என முடிக்க. இச்செய்யுட்கு, "நெறி விலக்கியது," என்ற துறை பொருந்தமாறு காண்க. வேலை யெதிர் - கடலின் எதிரிலுள்ளபாக்கம்: இடவாகு பெயர். வேலை - கடல்.

(56)

கடற்கானற் சேர்ப்ப! கழியுலா அய் நீண்ட
வடற்கானற் புன்னை தாழ்ந் தாற்ற - மடற்கான
லன்றி லகவு மணிநெடும் பெண்ணைத்தெம்
முன்றி லிளமணன்மேன் மொய்த்து.

[தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி இடங்காட்டியது]

(பத.) கடல் கானல் - கடற்கரைச் சோலைகளையுடை, சேர்ப்ப - துறை முகத்திற்குரிய தலைவனே! எம் முன்றில் - எமது இல்லத்தின் முன்னே, கழி உலாய் - உப்பங்ழிகள் சூழப்பட்டு, இளமணல்மேல் மொய்த்து - நல்ல மணல்கள் மேலாக நிரம்பி, நீண்ட - பெரிய, அடல் கானல் - (மீன்களைக்) கொன்று காயவைத்துள்ள உப்பளத்தோடு கூடி, புன்னை ஆற்ற தாழ்ந்து - புன்னை மரங்கள் மிகவும் தழைக்கப் பெற்று, மடல் கானல் - பூ விதழ்களையுடைய கடற்கரைச் சோலையில் வாழும், அன்றில் - அன்றிற் பறவைகள், அகவும் - (சேர்ந்து) அழையாநின்ற, அணி - அழகிய, நெடும் - உயர்ந்த, பெண்ணைத்து - பனையோடு கூடியது, (யாம் விளையாடுமிடம், என்று தோழி தலைவனுக்கு இரவுக்குறியிடங் கூறினாள்.)

(ப-ரை.) கடற்கானற் சேர்ப்பனே! கழிகள் சூழ்ந்து நீண்ட மீன் கொலைகளையுடைய கானலின்கண் மிகவும் புன்னை தழைக்கப்பட்டு, பூவிதழையுடைய இக்கானலின் கண் உள்ள அன்றில்கள் அழையாநின்ற அழகிய நெடும் பெண்ணையை யுடைத்து; எம் மில்லத்தின்முன் இளமணல்களும் மொய்த்து.

(விரி.) முன்றில் - இலக்கணப் போலி: இல்முன் என்னற்பாலது இங்ஙனமாயது. சேர்ப்ப! குறியிடம் எம் இல்முன் கழியுலாய், மொய்த்து, தாழ்ந்து, அகவும்