லிடையெலா ஞாழலுந் தாழையு மார்ந்த புடையெலாம் புன்னை புகன்று. [தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து இடங்காட்டியது.] (பத.) மாயவனும் - கண்ணனும், தம் முன்னும் - தமையனாகிய பலதேவனும், போல் - போன்று, (காணப்பெறும்,) மறி கடலும் - (அலைகள்) மறிந்துவரப் பெறுகின்ற கடலினையும், கானலும் - கடற்கரைச் சோலையினையும், சேர் - அதனைச் சார்ந்த, வெண்மணலும் - வெள்ளிய மணலினையும், கானல் இடை எலாம் - அச்சோலையின் நடுவெல்லாம் (நிறைந்துள்ள,) ஞாழலும் - கோங்க மரங்களையும், தாழையும் - தாழை மரங்களையும், புடைஎலாம் - அச்சோலையின் பக்கங்களிலெல்லாம், ஆர்ந்த - நிறைந்த, புன்னை - புன்னை மரங்களையும், புகன்று - விரும்பி, காணாய் - பார்ப்பாயாக. (என்று தோழி தலைவனிடத்திற் சொன்னாள்.) (ப-ரை.) மாயவனும் அவன் முன்னோனும் போல, மறிகடலும் கடற்சோலையும் அச்சோலையைச் சேர்ந்த வெண்மணலும் பாராயோ! அக்கடற் சோலையின் நடுவெல்லாம் ஞாழலுந் தாழையுமாய் இருக்கும்; நிறைந்த மருங்கெல்லாம் புன்னையாயிருக்கும்; இவற்றையும் விரும்பிப் பாராய். (விரி.) ஏ - அசைநிலை. ஓ - அசைநிலை. கடலையும், கானலையும், மணலையும், ஞாழலையும், தாழையையும், புன்னையையும் புகன்று காணாய்; என முடிக்க. மாயவனுக்கு மறிகடலையும், தம் முனுக்குக் கானல் சேர் வெண்மணலையும் உவமேயங்களாகக் கூட்டிக் காண்க. "புகன்று காண்பாய்," என்றது பகற்குறியிடமென மனத்தகத்தே பதித்துக் காண்பாய் என்பதனைக் குறிப்பாய் உணர்த்தியது. (59) பகல்வரிற் கவ்வை பலவாம் பரியா திரவரி னேதமு மன்ன - புகவரிய
|