தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே யேழை நுழைய ரிடம். [இரு பொழுதும் வாரலென்று வரைவு கடாயது] (பத.) பகல்வரின் - பகற் பொழுதின்கண் (புணர்ச்சியை வேண்டி) வருவாயாயின், கவ்வை - பழிச் சொற்கள் பல ஆம் - பலவாய்ப் பெருகும், பரியாது - (அப்பழிச்சொற்களுக்காகப்) பரிந்து வரைவினை மேற்கொள்ளாது, இர வரின் - இராப்பொழுதிலே வருவாயாயின், ஏதமும் - (உண்டாம்) இடையூறுகளும், அன்ன - அவைபோற் பலவாய்த் தோன்றும், (மேலும்,) ஏழை - எளியவர்களாகிய, நுளையர் - எம்மவராகிய பரதர்கள், இடம் - வாழுமிடமானது, புக அரிய - (பிறர்) புகுதற்கு முடியாதபடி, தாழை - தாழை மரங்கள், துவளும் - நெருங்கிப் படர்ந்து கிடக்கும், தரங்கம் நீர் - அலையோடு கூடிய கடனீரினையுடைய, சோப்பிற்று - கரையின் கண்ணதாகும். (ஆகலின், இருபொழுதும் வருதலை விடுத்து வரைவினை மேற்கொள்வாயாக, என்று தலைவனிடத்திற் றோழி கூறினாள்.) (ப-ரை.) பகல் வருவாயாயின், அலர்பலவு முளவாம்; அவ்வலர்க்கு இரங்காதே இரவு வருவையாயின், ஊறு வரும் ஏதமும் பலவுளவாம்; உள் புகுதற்கரிய தாழையடர்ந்த திரைநீர்ச் சேர்ப்பையுடைத்து, எங்கள் ஏழை நுளையர் வாழுமிடம். (விரி.) கவ்வை - அலர்: பழிச் சொற்கள். பரிதல் - அன்போடு கூடி இரங்கல். தரங்கம் - வடமொழி. ஏ - அசைநிலை. (60) திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக் கரையலவன் காலினாற் காணாக் - கரையருகே நெய்தன் மலர்கொய்யு நீணெடுங் கண்ணினாண் மைய னுளையர் மகள். [பாங்கற்குத் தலைமகன் கூறியது] (பத.) மையல் - (எனக்கு) மயக்கத்தையுண்டாக்கிய, நுளையர் - பரதரின், மகள் மகளாகிய தலைவி, திரை -
|