58

(கடலின்கண்ணுள்ள) அலைகள், அலறி - ஒலித்து, பேரா - திரும்பிப் போகும் வண்ணம், தெழியா - நீந்தித் துவைத்து, கரை திரியா - கரையினிடத்தே அலைந்து, அலவன் - அங்குள்ள நண்டுகளை, கால் இன் ஆல் - கால்களினாலே. காணா - கண்டு பிடித்து. கரை அருகே - கரைக்குப் பக்கத்திலே (மலர்ந்துள்ள,) நெய்தல் மலர் - நெய்தற் பூக்களை, கொய்யும் - கொய்கின்ற, நீள் நெடும் - மிகவும் நீண்ட. கண்ணணினாள்-கண்களை யுடையவளாவள். (என்று தலைவன் தோழனிடங் கூறினான்.)

(ப-ரை.) திரைகள் அலறிப் பெயரும் வகை தெழித்துத் திரிந்து கரையின்கண் அலவன்களைத் தன் காலினாலாராய்ந்து, கரையருகே நின்ற நெய்தன் மலர்களைக் கொய்யாநிற்கும் நீளிய நெடுங் கண்ணினாள் நுளையருடைய மையன் மகள்.

(விரி.) நீள் நெடும் - ஒருபொருட் பன்மொழி. இது தலைவன் பாங்கனிடத்துத் தலைவியினியல்பினை எடுத்துக் கூறியதாகும். இங்கு நுளையர் மகளின் இயல்பினை நண்டு பிடித்து நெய்தலைக் கொய்யும் நெடுங்கண்ணினாள் என்ற நேர்மை காண்க.

(61)

அறிகரிதி யார்க்கு மரவநீர்ச் சேர்ப்ப!
நெறிதிரிவா ரின்மையா லில்லை - முறிதிரிந்த
கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் டாழை யிணைந்து.

[தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது.]

(பத.) அரவம் - ஆரவாரிப்பினையுடைய, நீர் - கடனீரையுடைய, சேர்ப்ப - துறைமுகத்திற்குரிய தலைவனே! முறி - தளிர்கள், திரிந்த - சுருண்டு நிறைந்த. கண்டல் - நீர் முள்ளிச் செடிகள், அம் - அழகிய, தண் - குளிர்ந்த, தில்லை - தில்லைமரங்களுக்கிடையே, கலந்து - மிடைந்து, கழி - கடற் கழிகள், சூழ்ந்த - சூழப்பெற்ற, மிண்டல் - நெருக்கமான, அம் - அழகிய, தண் - குளிர்ந்த, தாழை - தாழை மரங்களும், இணைந்து - (அவைகளுடன்) கலந்து யார்க்கும் - எவருக்கும், அறிகு - (வழியினைத்) தெரிதல்,