தக்கான் அவனே யாவன்; அவனன்றி, அவன் போலும் ஆடவர்,) சுவர்க்கத்து - துறக்க வுலகத்திடத்தே, உளராயில் - இருப்பாராயின், சூழ் - ஆராய்வாய். (என்று தோழி செவிலியிடங் கூறினாள்.) (ப-ரை.) வில்லுழவர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும், நல்லாராகிய வனிதையர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும் எல்லா மாந்தருந் திரள் வராதலால், நாங்கள் அங்குக் கண்டறியேம்; எமக்கு ஓரு தவி பண்டொருநாட் செய்த சேர்ப்பனோ டொப்பாரை: மற்றவனே இவட்குத் தக்கான்; அவனைப் போலும் ஆடவர் சுவர்க்கத் துளராயின் ஆராய்வாய். (விரி.) வேலா + ஆழி = வேலாழி - கரையோடு கூடிய கடல். கோலஞ் செய்தல் - அழகுபடுத்தல். ஆராய்தல் - ஆலோசித்தல். உதவி - பூத்தரு புணர்ச்சி முதலியவற்றுள் ஈண்டுப் பொருந்தமான வொன்றினைக் கொள்க. தலைவனை யொப்பனாகிய தக்கான் யாண்டு மிலன் என்பாள், "சுவர்க்கத் துளராயின்." என்றாள். (63) நெய்தல் முற்றும்
|