61

மூன்றாவது-பாலை

எரிநிறநீள் பிண்டி யிணரின மெல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர்முலையாய்! பூந்தொடித்தோ
ளென்னணிந்த வீடில் பசப்பு.

[தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறீஇயது]

(பத.) புணர் - இரண்டாகச் சேர்ந்து காண்கின்ற, முலையாய் - முலைகளையுடைய தலைவியே! பிண்டி இனம் எல்லாம் - அசோகமரக் கூட்டங்கள் எல்லாம், நீள் - நீண்ட, எரிநிறம் - நெருப்பினைப் போன்ற நிறத்தோடு கூடிய, இணர் - பூங்கொத்துக்களைக் (கொண்டுள்ளன.) கோங்கம் (எல்லாம்) - கன்னிகார மரங்களெல்லாம், வரி - கோடுகளோடு கூடிய, நிறம் - அழகிய, வண்டர் - வண்டுகள், நீள் - நீட்டிப்பாடும் இளியென்னும் பண்ணினை, பாட - பாடிக்கொண்டு (மொய்க்கும் படி) புரி - விரும்பப்படுகின்ற, நிறம் - அழகோடு கூடிய, நீள் - பெரிய, பொன் - பொன் போன்ற மலர்களை, அணிந்த - மேற்கொண்டன, பூ தொடி தோள் - அழகிய வளையலணிந்த நின் தோள்கள் மட்டும், ஈடு இல் - (தமக்குத்) தகுதியில்லாத, பசப்பு - பசலை நிறத்தை, என் அணிந்த - எதன் பொருட்டாக மேற்கொண்டன? (என்று தோழி தலைவியை வினவினள்.)

(ப-ரை.) எரிநிறத்தையுடையன அசோக்கின் பூங்கொத்தினமெல்லாம்; வரிநிறத்தையுடைய வண்டுகள் இளியென்னும் பண்ணைப்பாட விரும்பப்படுகின்ற நீண்ட மிக்க பொன் போன்ற மலர்களை யணிந்தன, கோங்கமெல்லாம்; ஆதலாற் பொருந்திய முலையினை யுடையாய்! நின்னுடைய பூந்தொடித் தோள்கள் யாதின் பொருட்டு அணிந்தன தமக்குத் தகுதியில்லாத பசப்பினை?

(விரி.) பருவம் - வேனில். வற்புறுத்தல் தலைவன் வருதலைத் தலைவியின் மனத்தே வலியுற நிலைபெறுத்தல். வரி - கோடு, இரேகை. பொன் - உவமையாகு பெயர். இங்குத் தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற வேனிற்பருவம்