62

வந்தமையினைத் தலைவிக்குத் தோழி எடுத்துக் காட்டி அவன் வருகை யடுத்தது என்பதனை வற்புறுத்திக் கூறுகின்றனள். பாலை - பிரிதலும், பிரித னிமித்தமுமாகிய வொழுக்கம். இங்குத் தலைவி தலைவனைப் பிரிந்து நின்ற நிலை கூறப்படுகின்றது. பசப்பு - பசலை; தலைவனைப் பிரிந்த தலைவியர் கொள்ளும் மேனிமாற்றம். நீள் - பண்பாகு பெயர்.

(64)

பேணா யிதன் றிறத் தென்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய்! நாணின்மை - காணா
யெரிசிதறி விட்டன்ன வீர்முருக் கீடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு.

[இதுவுமது]

(பத.) இதன் திறத்து - நீ இவ்வகை யுறுகின்ற துன்பத்தினின்றும், பேணாய் - விலகி யுன்னைப் பாதுகாத்துக் கொள்வாய், என்றாலும் - என்று (யான் பன்முறை) சொல்லியும், பேணாது - பாதுகாத்துக் கொள்ளாது, நாண் ஆய - வெட்கமுறுதற்குக் காரணமான துன்புறுதலை மேற்கொண்ட. நல்வளையாய் - நல்ல வளைகளை அணிந்த தலைவியே! ஈர் முருக்கு - குளிந்த முருக்கமரங்கள், எரி - நெருப்பினை, சிதறி விட்டு அன்ன - சிதறி விட்டாற் போன்று பூத்தன, புன்கு - புன்கமரங்கள், ஈடு இல் - பளுவில்லாத, பொரி - நெற்பொரியினை, (சிதறிவிட்டு அன்ன-) சிதறி விட்டாற்போன்று மலர்ந்தன. (ஆதலால்,) நாண் இன்மை - நீ முன்பு செய்தது வெட்கக் கேடானது என்பதையும், (அவர் சொல்லிச் சென்ற வேனிற் பருவம் வந்தது என்பதையும்,) காணாய் - கண்டு நினது துன்புறுதலை யொழிப்பாயாக. (என்று தோழி தலைவியிடங் கூறினாள்.)

(ப-ரை.) "நீ உறுகின்ற துன்பத்தைப் பாதுகாவாய்," என்று யான் சொன்னாலும் பாதுகாவாதே நாணத்தகும் ஆற்றாமை செய்த நல்வளையாய்! நீயும் முன்பு நாணின்மை செய்தா யென்பதனை இனி யறிந்து கொள்ளாய்; எரியைச் சிதறிவிட்டாற் போலவிருந்த. ஈர்முருக்குக்கள்; கனமில்லாத