63

பொரி சிதறிவிட்டாற் போலப் பூத்தன, புன்குகள்; ஆதலான் அவர் சொல்லிய பருவம் இதுகாண்.

(விரி.) இங்கு, 'வேனில் வந்தது; வேந்தன் வருவன்' எனக் கூற வந்த தோழி, "பேணா யிதன்றிறத் தென்றாலும் பேணாதே நாணாய நல்வளையாய்!" என்றதும், "நாணின்மை காணாய்," என்றதும் தலைவியின் அறியாமை கூறி வற்புறுத்தியனவாம்.

(65)

தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
வீன்றாய்நீ பாவை யிருங்குரவே! - ஈன்றாண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டா யீதென்று வந்து.

[சுரத்திடைச் சென்ற செவிலித்தாய்
குரவொடு புலம்பியது.]

(பத.) இரும் குரவே - பெரிய குராமரமே! கோங்கம் - கோங்க மரம், தாய் ஆ - தாய் போன்று, தளர்ந்து - தாழ்ந்து (மன நெகிழ்வுற்று,) முலை கொடுப்ப - முலை போன்ற கோங்க மலர்களைக் கொடுக்க (பாலூட்ட,) நீ பாவை ஈன்றாய் - நீ பொம்மைப் போன்ற காய்கள் காய்க்கப் பெற்றாய் (பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாய்,) (அதனால்,) ஈன்றாள் - என்னால் பெற்றெடுக்கப் பட்டாள் (தலைவி,) மொழி - (நின்மாட்டுச் சொல்லிய) சொற்களின் பொருளை, காட்டாய் - (எனக்கு) எடுத்துக் காட்ட வல்லாயல்லை, ஆயினும் - ஆனாலும், முள் எயிற்றாள் - கூர்ந்த பற்களைக் கொண்ட என் மகள், சென்ற - (தலைவன் பின்னாகப்) போய, வழி - வழியினை, வந்து - முன் வந்து, ஈது என்று - இதுதான் என்று, கட்டாய் - காண்பிப்பாயாக. (என்று செவிலி குராவொடு கூறினாள்.)

(ப-ரை.) கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங்குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லா யாயினும் முள்ளெயிற்றாள் போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இது என்று.